ஒரு வினாடி
உள்ளத்தின்
உணர்ச்சிகளில் ஓவியமாய்
உறைந்தது
ஒரு வினாடி
கண்களின் மணிகளில்
காவியமாய்ப்
புதைந்தது
ஒரு வினாடி
காதுகளின்
சுவர்களில்
கானமாய் ஒலித்தது
ஒரு வினாடி
தென்றலின் குளிர்மை
உடலோடு உறவாடி
தீண்டும் சுகம்
ஒரு வினாடி
பார்வைகள் மோதி
காதலாய்த் தெறித்து
மோகமாய் வளர்வது
ஒரு வினாடி
ஒவ்வொரு வினாடியாய்
கிடைத்த கிளர்ச்சிகளின்
மொத்த உருவமாய்
தொலைவிலே நீ
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-02-28