பறை
முன்பொருமுறை
பற்றியது
பின்பொருமுறை
பதிலுக்கு
பற்றவைத்தது
அநியாயம் கண்டு
கொப்பளித்தது
சுழன்று சுழன்று
சோர்ந்துப்போகுமென்று
எண்ணுகையில்
சீறிப்பாந்தது
ஒத்திசை பாடலமைத்து
ஓங்காரமிட்டது
கேள்விகளாயிரம்
கேட்டு.. கேட்டு.. கேட்டு..
பதிலுக்குக் காத்திறாமல்
ஆளுமையின் திமிர் அடக்க
செவிகிழிய
அறையத்தொடங்கிற்று
எமது
ஆதிப்பறை
- கவிமதி
- கவிமதி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-07-12