களப்பணியில்
சாகவேண்டுமென்
சகலமும்
தூசுகளுக்கல்ல
துவக்கிற்கஞ்சாதவை
எமது கவிகள்
பூஞ்சையற்றதல்ல
எம் புணர்சென்மம்
வன்மம்
வாங்கி வாங்கி
இருத்தலில்
கிடையாதெங்கள்
வலி
மறுத்தபொழுதினும்
மாசற்ற வீரம்
எமதுவீரம்
எமக்கு
மறுபிறவியென்பதே
மண்ணறையில் தொடங்கும்
பெருத்த விலையில்
பொருமி விடியுமெங்கள்
காலம்.
பிச்சைபாத்திரத்திற்கு
ஏங்குமென்கிறபோது
அட்சயப்பாத்திரங்கள்
அருகருகே
அடுக்கப்பட்டிருந்தும்
திரைவிலகும்
திசையிற்கழியும்
கத்தை கத்தையான
காலம்
அந்திமக்குமரிகள்
கூடியடிக்கும்
கும்மிகளுக்கிடையில்
சிதறி தெரிக்கும்
காற்று பிசிரென
கணபொழுதுளில்
சறுக்கித்தான் போகிறதெம்
உச்சவரம்பின்
பிடிவாதங்கள்
உத்திரவாதம்
கொடுக்கப்பட்ட
வேலையில்
அடக்கமாட்டாது
கணுப்பிதுக்கி
வெளிச்சப்பட்டதெம்
கொளுந்து
உச்சபட்ச
இறப்பிற்கு
பொய்க்கும்
எந்த உயிர்க்கும்
சந்ததி வளர்க்கும்
சமப்பொழுகளின்றும்
விட்டுவிலகி
விசுக்கென
பறக்கிறதெம்
தும்பிக்கூட்டம்
-கவிமதி (அசன்பசர்)
*** நான் எனது பெயரினை (அசன்பசர்) மாற்றிவிட்டு தமிழ் பெயரான கவிமதி எனும் பெயரினை ஏகமனதாக அறிவித்துள்ளேன்.
- கவிமதி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-03-27