அன்னையைப் போற்றுவோம்!
( அன்னையர் தினம் - மே -8 )
அவளும் நானும் ஓருயிர் ஓருடல் - ஆம்
நஞ்சுக்கொடி அறுபடும் முன்னே
நானும் தாயும்!
உதிரம் உறிஞ்சும் ஒட்டுண்ணியாய்
எனது பிறப்பு !
மழலையாய் உன் மடியில் நான்!
கொடி போட்டு முடித்துவைத்தாய்
எனை உன்னுள்!
நீர்ப்பையில் சுமந்தாலும்
நெருப்பு தருணங்கள்தான் உனக்கு!
கொடியசைத்து துவக்கமே
உலக மரபு ஆனால்
கொடியறுத்து துவக்கிவைத்தாய்
கருவறை துவங்கி என்
கல்லறைப் பயணத்தை!
பயணம்வரை உன்
பாதம் விழுவேன்
பாசமுடன் ஆசியளிப்பாய்!
இருந்தும் ஒரு வரம் தருவாய்
இன்னொரு பிறப்பிருந்தால்
தாயே
உன் மடித் தொட்டிலுக்கும்
மார்புக் கட்டிலுக்கும்
மழலையாய் நான் மறுபடியும்!
அன்னையின் ஆசிவேண்டி
.இ.ஜேசுராஜ்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-05-24