என்ன வேண்டும் உனக்கு?
என்ன வேண்டும்
எண்ணியவை முடிக்க?
ஏன் தாமதம் ?
எழு விழி
எண்திசை நோக்கு
எண்ணங்களை புடமிடு சிகரம்தனை
எட்டிடவே ஓட்டமெடு !
அகண்ட உலகு
ஆழ் கடல்
உயரே வானம்
உனக்கென்ன வேண்டும்?
ஊன்றிட பாதத்திற்கா
இடம் தேடுகிறாய்? நீ
நிற்குமிடத்திற்கு கீழேயும்
நிலம்தான் ! நீ
தொடவேண்டியது உயரம்மட்டுமே!
நிகழ்கால நிதர்சனம்
நிலம்மட்டுமே நிற்பதற்காய்!
உன் காலடியில் நிலம்
பாதம் நகர்த்து புது
பாதை கிடைக்கும்
சிகரமும் எட்டும்!
ஆக்கம்
இ.ஜேசுராஜ் - கீரனூர்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-11-16