பரவசமானேன்
- வேதா மஹாலஷ்மி
நெரிசலான நிறுத்தம்..
அவசரமாய் உலகம்..
...........
ஏதோ உந்துதலில்..
அரட்டையில் நழுவி அமைதியானேன்!
அத்தனை பேரையும் தாண்டிய
உன் தனிப்பார்வை...
என் மீது மட்டும் போர்வையாய்!
நொடி, நிமிடம் அல்ல..
நெடுநேரம்... வெகுவாக!
பட்டப்பகலில் வெட்டவெளியில்
மனசோடு மனசாய்
நீ தந்த பரவசத்தில்
பெண்மையின் மென்மை நிலைக்க....
கொஞ்சம்,
பரவசமானேன் நான்!
veda
piraati@hotmail.com
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-03-27