பூ
=
- வேதா மஹாலஷ்மி
என்றைக்கும் போல்
இன்றைக்கும் ஒரு பூ..
அந்த செடியில்!
இதுவரை பூத்ததெல்லாம்
எதற்கோ பூத்துவிட,
அங்கங்கே சில மொட்டு மட்டும்
உச்சி திறக்க, உரசி நிற்க,
காதலின் வண்ணமாய்
காம்பு வரை மணம் நிறைத்து
காற்றும் தீண்டா கவிதையாய்
ஆயிரம் பவுர்ணமியின் அழகே அழகாய்
அதோ ஒரே ஒரு பூ மட்டும்....
யாருக்காகப் பூத்திருக்கோ...
என்றைக்கும் போல்
இன்றைக்கும் ஒரு பூ..
அந்த செடியில்!
veda
piraati@hotmail.com
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01