Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

ஒற்றைக்கை தட்டுதலால்

- பவித்திரா

ஒற்றைக்கை தட்டுதலால் ஓசைதான் பெருகிடுமோ?
கனடாவிலிருந்து பவித்திரா

பொங்கியெழுக தமிழினமே! புகலிட நாடுதனில்!
புதியதோர் வரலாறு படைத்திடப் புறப்படுவீர்!
எங்களரும் தமிழன்னை ஏற்றம்தனை எண்பிக்க
இதயத்தால் ஒன்றுபட்டு எழுச்சியுடன் இணைந்திடுவீர்!
சிங்களத்தின் செயல்கள்தாம் சீரற்றுப் போதல்தனைச்
சிறந்தவெழில் நாடுகளின் சிந்தைக் கெட்டிடவே
பொங்குதமிழ்த் திருநாளில் புனல்வெள்ள மெனப்பெருகிப்
புளகிதம் நிரம்பிடப் புத்துணர்விற் கூடிடுவீர்!


இடைக்காலத் தன்னாட்சி யதிகார மென்கின்ற
எம்மவரின் வேண்டுதலை முற்றாகப் புறக்கணித்து
உடைத்தெறிய முற்படும் ஊழல்மிகு ஆட்சியதன்
ஊனமுறு உளம்தனை உலகத்தோர் அறிந்திடவும்
படைகொண்டு எம்நிலத்தில் பலவந்த மாய்ப்புகுந்து
பாதுகாவற் பகுதியெனப் பாமரரைத் துரத்திடும்
கடைகெட்ட நடைமுறைக் கொடுமைதனைப் புவியறியக்
காட்டிடவே கூடிடுவீர்! கரம்கோத்து நின்றிடுவீர்!


“எமக்கென மொழியுண்டு; நாடுண்டு தலைமையுண்டு!
ஏற்றமுற ஆண்டிடும் வல்லமையும் மிகவுண்டு!
தமக்கென விளங்கிடும் சிங்களத்தே சம்தனில்
தக்கநல் லாட்சியவர் தகவுடனாற் றுதல்தான்
உமக்கும் நன்றன்றோ? உயிர்கட்கும் விடிவன்றோ?
உலகே நீயதன் உண்மைதனை உணர்ந்துமே
சமத்துவம் பேணிடுவாய்! தார்மீகம் காத்திடுவாய்!
சரியான முடிவொன்று தருவா” யென முழங்கிடுவீர்!


என்னருமைத் தமிழினமே! எண்ணிப் பார்த்திடுக!
எங்களரும் நாட்டின் பொங்குதமிழ் வெற்றிதனை
அந்நியரின் ஆட்சியிலும் அடக்குமுறைக் கொடுமையிலும்
அடிபணியாத் திடமுடை மாணவ மணிகள்தாம்
கன்னங்கரு இருளினிலும் காவலரண் தடையினிலும்
கதவுகள் தட்டியங்கு கனிவுமொழி காட்டியே
சன்னங்கள் துளைத்திடினும் சலிப்படையா உணர்வுடனே
சான்றாண்மை கொண்டங்கு சாதித்தார் அறிவீரே!



நன்றியென்ற மூன்றெழுத்தை நாமென்றும் மறக்காது
நலமான வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் வித்திட்ட
இன்றுவரை தமிழிற்காய் இனத்திற்காய் உயிர்நீத்த
எம்முடன் பிறப்புக்கள னைவரையும் நெஞ்சிருத்தி
பன்றிகளின் கபடங்கள் பாரெங்கும் புலப்படவே
பல்லாயிர மாய்க்கூடிப் பதாகையுட னேயானைக்
கன்றெனவே திரண்டிடுவீர்! கடலெனப் பெருகிடுவீர்!
கன்னியரே காளையரே கடமைதனை உணர்ந்திடுவீர்!


மொழியா லொருவராகி மதத்தால் வேறுபடும்
முருகுதமிழ் பேசிடும் முஸ்லீம் சோதரரே!
ஒழித்திடுவீர்! வேற்றுமைகள் ஒவ்வாக் கருத்துக்கள்
உளத்தின்கண் மாசகற்றித் னயதமிழ் பேணிடுவீர்!
எழில்மிகு தமிழீழம் ஈடில்லா எம்தேசம்
எதிரியின் காலடிக்குள் கசங்கிட விடலாமா?
இழந்தவெம் முரிமைகளை எளிதாகப் பெற்றிடவே
எல்லோரும் ஒன்றாகிக் குரலெழுப்ப வந்திடுவீர்!;


ஒற்றைக்கை தட்டுதலால் ஓசைதான் பெருகிடுமோ?
ஊடகங்க ளேநீங்கள் உணர்ந்து செயற்படுக!
ஒற்றுமையின் மகத்துவத்தை உள்ளத்தே நினைவிருத்தி
உடலாற் பலராகி இதயத்தால் ஒன்றாகி
நற்றமிழ் விழாவிங்கு நலமே நிகழ்ந்தேற
நல்லபணி யாற்றிடுவீர்! நானிலமும் விழிப்புறவே!
பற்றிநிற்கும் பகைவருமெம் கட்டமைப்புக் கண்டங்கு
பாசறைகள் விட்டகல்வார் பயம்கொண்டு விலகிடுவார்!


தாயகத்திற் கடுத்தபடி தரணியிலே பெருந்தொகைத்
தமிழீழ மக்களெனத் தாள்பதித்த தேசமதில்
வாய்த்த பெரும்பணியை வரலாற்றுக் கடமையென
வண்ணமுறச் செய்திடுவீர்! வருங்காலம் போற்றட்டும்!
னயநம் மீழத்துச் சொந்தங்கள் பந்தங்கள்
துணையென எமையெண்ணித் திண்மையுடன் செயற்பட
நேயமுடைத் தந்தையரே தாய்மாரே குழந்தைகளே!
நெஞ்சுறுதி கொண்டங்கு நின்றிடுவீர் நிமிர்வுடனே!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-01-01


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • அன்னை பூபதிக்காக...
  • ஏனிந்தப் பிரிவினை?
  • விண்ணிலிருந்து கோமகன
  • நன்றி தமிழகமே!

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube