Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

இலக்கியம் படித்த நீ

- ஜோதி - த.ஜெயபால்

இலக்கியம் படித்த நீ

'ஜோதி'


இலக்கியம் படித்த நீ
என்னை இலக்கியம் ஆக்காமல்
தோல்விக்குப் பொருள் கூறும்
வெறும் அகராதி ஆக்கிவிட்டாயே!

அன்பே
நீ கொடுத்த காதல் பரிசுகள்
இதோ பார்
மஞ்சத்தில் மதுப்புட்டிகள்!

இந்த
இதயப் பிச்சைக்காரனின் அவலப் பாட்டு
உன்
இதய மாளிகையில்
எதிரொலிக்கவே இல்லையா?

என் எழுதுகோலின் ஒவ்வொரு அசைவிலும்
ஒரு கலை மாளிகை உருவாகிறது
என்று கூறிய என் அன்பே_
நீ எனக்களித்து விட்டுப் போன
இந்த
முகாரி கவிதையையாவது
கேட்டுவிட்டுப் போ..

பறக்கத் தயாராகிவிட்ட மனக்குயிலே
ஒடிந்த சிறகும் உதிரக் கண்ணீரும்
ஒழுக நிற்கும்
இந்த இணைப் பறவை
உன் கண்களுக்குத் தெரிய வில்லையா?

காலத்தின் கோலத்தில்
கருகிப் போகும் ஒரு மலராக
இந்த கவி உள்ளம் ஆக வேண்டுமா

உன்னை மன ஊஞ்சலில்
இருத்தி மகிழந்த என்னை
மயானத்திற்கு அனுப்ப வேண்டுமா?

என் இதய சன்னதிக்கு வெடி வைக்கவா
உன் நாத்திக மனதின்மேல்
ஆசை வைத்தேன்?

துயில் சமாதியைக் கூட
உன் நினைவு நரிகள் விட்டு வைக்கவில்லை.

நெருஞ்சிமுள் காலில்தான் தைக்கும்
ஆனால் நீயோ மனதில்-

வாழ்க்கைப் பள்ளியில்
'பெண்கள் சிலபஸ்' இருக்கும் வரை
தோற்பவர்கள் ஆண்கள் தான்.

உயிர்ச் சீதையே
மண இராவணணைக் கொன்றுவிடு.
கால இராமனுக்காக காத்திருக்க
நீ கல் அல்ல...

'ஜோதி'

த.ஜெயபால்.எம்.ஏ.பி.ஜி.எல்.,டி.எச்.பி.எம்

1258-16 வது தெரு,பூம்புகார் நகர்,சென்னை-600 099..

jeyapalt@yahoo.com
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-01-01


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • அவனை மட்டும் காணவில்லை
  • சக்கரை ரஹஸியம்
  • அணங்குகள்... இங்கே இருக்குது ஜாதி

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube