Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

அணங்குகள்... இங்கே இருக்குது ஜாதி

- ஜோதி - த.ஜெயபால்

அணங்குகள்... இங்கே இருக்குது
----------------------------------------------

1.அணங்குகள்

வாசற்படி நின்று
வசந்தப் பூக்களை
கண்களில்
நிதம் நிதம்
மலர்விக்கின்ற
மாதவிக் கொடிகள்.

எப்போதோ
சந்தோஷிக்கப் போகின்ற
ஒரு பொழுதிற்காக
காத்திருக்கின்ற
சமுத்திர விழிகள்.

புத்தகங்களைப்
பரிமாறி
இதயங்களை
விலைப்பேசும்
தரகர்கள்.
நிகழ்காலங்களை
நிர்வாணமாக்கிய
துச்சாதனர்கள்.

கடற்கரை மணலில்
நாணத்தைப் புதைக்கும்
நெருப்புக் கோழிகள்.
புலிக்குகை உலகில்
எதற்கோ அலையும்
பேய்த்தேர் மான்கள்.


2.இங்கே இருக்குது ஜாதி

அல்லி குளக்கரையில்
தாமரை
அலரும் புலர்பொழுதில்
குளிக்கும் மலர்களோ
ஜாதிப் பூ
சேரி உடல்களுக்கு
அங்கே
தடை விதிப்பு.

தினம் தினம் நிகழும்
எம் சந்திப்பு
இன்றென்ன ஆனது
நெஞ்சில் தவிப்பு

இன்னும் வரவில்லை
என் காதலி
ஏன்தான் விடிந்ததோ
காலைத் தீ.

குனிந்த தலை
குனிய குளிப்பாள்
குள மீன்கள்
கண் பார்க்க நகைப்பாள்
எத்தனைக் கோடி கதிர் வீசும்
இளைய
என் காதலி மேனியிலே.

இப்படி பறந்த
என் மனக் குதிரை
இடறி விழுந்தது
குரல் கேட்டு.
�யாரடா படுவா படித் துறையில்
என்ன உன் ஜாதி?
படித்த திமிர்�......

பண்ணையார் நின்றார்
என் எதிரில்
பயத்தில் உறைந்தேன்
நான் சின்ன ஜாதி.
அம்பது சுதந்திரம்
கண்டது பூமி
ஆனாலும் என்ன
இங்கே இருக்குது ஜாதி.

-ஜோதி - த.ஜெயபால்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-03-16


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • அவனை மட்டும் காணவில்லை
  • இலக்கியம் படித்த நீ
  • சக்கரை ரஹஸியம்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube