சத்தி சக்திதாசன்
தூரம் கொஞ்சம்தான்
கூட வா நண்பனே !
காலங்கள் பல நாம் இணைந்தே வந்தோம்
கண்டது பாதையில் கற்களும் , முட்களுமே !
அதோ பார் !
பசுந்தரையன்று பச்சையாய் நம்முன்னே
தூரம் கொஞ்சம்தான் கூட வா நண்பனே !
துன்பத்திலே பங்கெடுத்தாய்
இன்பம் னரம் ஆதிகமில்லை
இப்போது ஏன் பாதை மாற்றம்
தூரம் கொஞ்சம்தான்
கூட வா நண்பனே !
வாடிநின்றவேளை பசியால் , நாம்
புசித்திருந்தது நமது நட்பையே
வயிறார உண்ணும் ஓர் வசதி
வரும் வேளை ஏன் தோழா
வழிமாறப்போகிறேன் என்கிறாய் ?
எதிர்காலம் ஒன்று வெளிச்சமாய் தெரிகிறதே
தூரம் அதிகமில்லை என்னோடு கூட வா !
பாசம் எனும் விலங்கினால் பிணைத்து
வாசம் அற்ற
வாழ்க்கையில் காலம் எனைத் தள்ளி விட்ட போது
வழித்துணையாய் வந்தவனே
விடுதலை எனும் ஊரை நெருங்கி விட்டோம்
விரக்தியோடு ஏன் இன்று
விடைபெற்றுப் போகின்றாய் னரம்
கொஞ்சம்தான் கூட வா !
நட்புக்கோர் இலக்கணமானவனே
நன்றியை நான் செலுத்தும் முன்னே
நெஞ்சத்திரையில் ஏன் உந்தன் காட்சியை
நிறைவு செய்ய துடிக்கின்றாய் ?
தொடர்ந்து செல்வோம் வா தோழனே
விடுதலைக் காற்றை சுவாசித்துக் கொள்வோம்
வேதனைகளை விற்று கொஞ்சம் சாதனைகளை
வாங்கிக் கொள்வோம்.
நட்பெனும் தோணியில் ஆழ்கடலைத்
தளும்பாது தாண்டி விட்டோம்
தயங்காமல் தரை மட்டும் கூட வா !
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-12-17