Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

அவனை மட்டும் காணவில்லை

- ஜோதி - த.ஜெயபால்

அவனை மட்டும் காணவில்லை


பெற்றோம் வளர்த்தோம்-
பிள்ளைகளை
பள்ளி செல்லும்
அவரழகைப்
பார்த்து தினம் ரசித்தோம்
அந்தோ இன்று
பூ முகம் பார்ப்பதற்கும்
முகம் தடவி
பூ முத்தம் சொரிவதற்கும்
சாம்பல் கூட கிடைக்கவில்லை
சண்டாளா
சுடலைமாடா
சுட்டெரித்தாயோ சுடர்களை
தங்கத் தாமரை மலர்களை..
பூசிக்கொள்ளும் சாம்பலுக்கு
பூ மழலைகள் தான் கிடைத்தாரா
காலைமாலை கையெடுத்தோம்
கஞ்சிக்கு வழி இல்லை ஆனாலும்
படையலிட்டோம்.
ஆனால் நீயோ
மழலைகளைக் கொலை செய்தாய்
மானிடர் வாழ்வைச் சிதையிலிட்டாய்
மழலைகளின் விழி அழகை
ஊமையான மொழி அழகை
பெற்றோரின் கனவை
கொடுஞ் சிதையில் இட்டெரித்தாய்.


சீருடையில் பள்ளி சென்ற
செப்புக் கை கால் பிள்ளைகள்
கையசைத்த அழகு
கரிக்கட்டை ஆனதய்யோ
எழுதிக் கற்ற பள்ளி அறை
தலையெழுத்தை எழுதிடுச்சே..


பள்ளிக்கூட தலைமை
பார்த்து பார்த்து சொல்லித் தரும்
ஆசான்கள் பறந்தாரே..
யார் மேல் குத்தம் சொல்ல?
எங்கள் குலம் அழிந்ததைய்யோ..


கோயில்கள் நிறை கும்பகோணத்தில்
நீ ஆடிய ஊழிக்கூத்தில்
அலறி துடித்த குரல் கேட்கலையா
அழகு எரிகற்கள்
எரிந்து விழுந்தது தெரியலையா
எரியும் பூக்கள் உயிர்காக்க
ஏனோ நீ வரவில்லை

அணிஅணியாய் அஞ்சலிகள்
தலைவர்கள் தொண்டர்கள்
தாய்மாரின் கதறல்கள்
பெற்றவனின் கூக்குரல்கள்
பிள்ளைகளைத் தீண்டிய தீ யவனை
தண்டிக்கும் சாபங்கள்
உயிர் பிழைத்த பிள்ளைகளின்
பூக்குவியல் அஞ்சலிகள்
கவிதைகள் கண்ணீர் ஊர்வலங்கள்..
உலகமே கூடியது
மழைக்காணா குடந்தை நகர்
மக்கள் கண்ணீரால் நனைந்தது
அநியாயக்காரன் அவன்
அவனை மட்டும் காணவில்லை..

- ‘ஜோதி’
(த.ஜெயபால்)
---------

T.JEYAPAL M.A., B.G.L., DHBM (Homoeopathy) 1258, 16th Street Poompuhar Nagar
Chennai-600099.

jeyapalt@yahoo.com
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-12-17


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • இலக்கியம் படித்த நீ
  • சக்கரை ரஹஸியம்
  • அணங்குகள்... இங்கே இருக்குது ஜாதி

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube