புலிவால் பிடித்தோமடா.. காவிக்காட்டுமிராண்டி..குப்பத்துக் காதல்
01.
புலிவால் பிடித்தோமடா
--------------------------------
வெளி நாட்டு வாழ்க்கை
விவகாரம் நிறைந்ததடா..
விட்டெறியும் காசை
நோக்கி செல்லும்
போது விட்டுச் செல்வது
உறவை மட்டும் இல்லையடா..
உணர்வு உணர்ச்சி ஆசை
அதனுடன் சேர்த்து நாம்
நம் நாடு உயிருடன்
திரும்புவோம் என்ற நம்பிக்கை
இத்தனையும் விட்டுச்சென்றால்
கிடைப்பது வெளிநாட்டு
வாழ்க்கை..
வாழ்க்கை அது என்ன வாழ்கையடா
வாய்திறந்து விவாதிக்க முடியாத
ஓட்டமடா..
உட்கார முடியாத உழைப்படா
உறவுக்கு மடல் போட முடியாத
பணிச்சுமையடா..
விட்ட காசை எடுக்க வேண்டும்
என்ற வேகமடா அடகு வைத்த
பத்திரம் மீட்ட வேண்டும் என்ற
இலட்சியமடா..
கட்டிய மனைவியைக் கனவில்
கட்டி அணைத்து பாசமான
மகளுக்கு நினைவில் முத்தம்
கொடுத்து காச்சி மூச்சி என்று
கத்தும் சத்தங்களுடன் கண்
மூடி தூங்கும் நிலைமையடா..
இளமை ஆசைகளை பலியாக்கி
இளமையை இரையாக்கி
இன்பத்தைக் கொலை செய்து
துன்பத்தில் துவண்டு எடுப்பது
தான் வெளிநாட்டுப் பணமடா...
விபத்து என்று ஒன்று நடந்து
இறப்பை நோக்கினால் இறுதிக்
கடமையும் நமக்கு சரிவரக் கிடைப்பது
இல்லையடா..
தொட்டு உடலை துடைக்க
உறவுகள் பக்கம் இல்லையடா
கொட்டி விடுவான் அரபி ஏதோ
ஒரு திரவியத்தை மூடி விடுவான்
பெட்டியை..
போட்டு விடுவான் பெட்டியை
பொதியோடு பொதியாக மாதங்கள்
பல கடந்து நாடு வந்து சேரும் உடலடா..
உடல் அடக்கம் இன்றி கடைமைக்
காரியங்களும் கைவிடப்பட்டு
உறவுகள் கவலையில் இருந்து
விடுபட்ட பின்னே நம் உடல்
கிடைப்பது திண்ணமடா..
மனைவி மக்கள் புகைப்படம்
பார்க்க ஆசை என்று அனுப்புங்கள்
என்று கூறவும் தைரியம் இல்லையடா
பாவிகள் சிலர் கையில் சிக்கினால்
என் மனைவி மானம் புகையாக
போகுமடா..
ஊரார் கண்ணுக்கு தெரிவது
எங்கள் ஊதியம்
ஓட்டு வீடு கிடைத்தமையால்
உறவுக்கு குதூகலம்
உண்மை நிலவரத்தை மறைத்து
உள்ளுக்குள் அழுது உடலை
வருத்தியே வாழ்வது எங்கள்
வெளி நாட்டு வாழ்க்கையடா..
திணார் டாலர் ரியால்
கொடுக்கும் வலி கொஞ்சம்
இல்லையடா சொல்லவே வார்த்தை
நிறையவே உள்ளதடா அதுக்கு
எல்லையே இல்லையடா...
கவிக்குயில் ஆர் எஸ் கலா
இலங்கை தளவாய்
02.
"காவிக்காட்டுமிராண்டி"
-------------------------------------
அகங்காரக் காரன் இவன்
அவையடக்கம் நாவடக்கம்
அறியாத மிருகம் இவன்...
அன்பின் இலக்கணமாக
வந்த புத்தர் வழி வந்த
வம்புக் காரன் இவன்..
மரியாதை தெரியாத
மனிதன் இவன்
பல இன மகத்துவம்
புரியாத பிக்கு இவன்..
உலக மக்கள்
உன்னதமாக
உணரும் ஒரு
மகானை எழுந்து
வரவேற்கவும்
உற்று நோக்கி
உரையாடவும்
வேண்டும் என்பதே
புரியாத மடையன் இவன்..
பரம்பரை திமிரும்
மதப் பிரிவினையும்
மறைந்தே இருக்குது
காவி உடைக்குள்ளே..
கருணை நிறைந்த
உள்ளம் தேடி வந்து
இன் முகத்துடன்
உரையாடுகின்றதே
கருணையே இல்லாத
சைத்தான் கடு கடுப்பாக
அமர்ந்திருக்கின்றதே..
மூன்று மதமும்
முக் கடல் போல்
சங்கமித்த இடத்தில்
இவன் மட்டும்
மூதேவி போல்
திரும்பி இருப்பதும் ஏனோ..
இன வெறி பிடித்த
இவனுக்கு இணை அடி
கொடுக்கத்தேவை
ஒரு கரம்..
ஆட்டுக் கூட்டத்தின்
மத்தியிலே அமர்ந்து
இருக்கின்றது ஒரு
குள்ள நரி காட்டுப்
பன்றியாட்டம்
கபட எண்ணத்தைப்
பூட்டி வைத்தபடியே
இவன் உள்ளத்திலே...
அடங்கா மாட்டை
அடித்து அடக்குவது போல்
சாட்டையோடு வர வேண்டும்
நெஞ்சை நிமிர்த்தி
சேவகன் ஒருவன்...
சேட்டு இல்லா இந்தச்
சிடுமூஞ்சிக்குசொடுக்கும்
நொடியில் கொடுக்க
வேண்டும் பல அடிகள்..
நீ அடங்கும் காலம் வரும்
வரும் வேளையிலே
நடுங்கும் உன் கால்களடா..
ஏற்ற இறக்கம்
தெரியாத ஏமாளியே
போற்றப்பட வேண்டிய
ஒரு மனிதனை அவமதித்த
கோமாளியே....
காலியாகப் போகும்
நாழிகை எப்போ எப்போ
என்று நினைத்த படியே
கலியுகக்கடவுளாய்
ஆட்சி செய்யடா...
வெல்லப் போவது
ஒரு காலம் நல்ல
உள்ளமடா கள்ளன்
உன்னை தள்ளப் போகிறது
கம்பி அறைக்குள்ளேயடா...
03.
குப்பத்துக் காதல்
------------------------
கண்டாங்கி கட்டி
வந்த பொண்ணு
நான் உற்று
நோக்கினேன்
அவள் கண்ணை
ஏறியது போதையடா
இறங்கவே இல்லையடா
மயங்கியே சாந்தேன்
அவள் மடியினிலே..
கூடை சுமக்கும்
கூடாரப் பெண் தானே
என்று இழக்காரமாக
நின்று நோக்கினேன்
அன்று வழுக்கி விழுந்தேன்
அவள் நினைவினிலே
இன்று......
கொட்டகை வாசி தானே
தொட்டுப்புட்டு விட்டு
விடலாம் என்று
கிட்ட நெருங்கிச் சென்றேன்
சுட்டெரிக்கும் அவள்
மூச்சுக் காற்றில் சிக்கித்
தவித்தேன்...
சத்தம் இன்றி
சமாதானக் கொடி
ஏற்ற நினைத்தேன்
காதல் என்னும்
வசனம் பதிவு செய்து
அவளிடம் கொடுத்தேன்...
மறுப்புக் காட்ட வில்லை
வெறுக்கவும் இல்லை
முகம் சிவக்கக் கண்டேன்
கோபமா..வெட்கமா நான்
அறியேன் இப்போது
நான் நிட்கவா ஓட வா
ஒன்றுமே புரியலயே..
வெட்டிக் கொடுக்கும்
மண்ணைக் கொண்டு
கொட்டும் குப்பத்து
வாணியே .. நான் கொடுப்பேன்
நெற்றிக் குங்குமம் உன்னை
அழைப்பேன் என் இல்லத்து
ராணியாவே...
கூட்டத்தைக் கூட்டாதே
குடும்பத்தை அழைக்காதே
காட்டிக் கொடுக்காதே கட்டில்
இடுவேன் நான் சத்தியமாய்
பத்தினியாய் உன்னை
மெச்சுவேன் பத்திரமாய்...
வெட்டருவாள் தேடாதே
வெட்கம் கொண்டு ஓடாதே
வெந்துபோய் இருக்கேன்
நான் உன்னாலே...
பட பட என்று உன்
இமையை மூடி திறக்காதே
வெட வெட என்று
நடுங்குகின்றேன் நான்
என் உள்ளே....
அட கல கலவென அவள்
சிரித்து விட்டாள் இனி
மள மள வென்று வளரப்
கோகின்றது என் காதல் மரம்
குளு குளு என்று இப்போது
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2015-11-04