வெளி நாட்டுப் பணி..தகிக்கும் தனிமை..ஒரு சாண் வயிறு
01.
வெளி நாட்டுப் பணி
------------------------------
வறுமையின் பிடியால்
பெண்கள் எடுக்கும்
திடிர் முடிவு அயல்
நாட்டுப் பணி...!!!!
பல கதை கூறி
தன் மக்களைப்
பாரப்படுத்துவது
உறவிடம்...!!!!
பல ஏக்கங்களையும்
கவலைகளையும்
சுமந்து கலங்கிய
கண்ணுடன் விடை
பெறுகின்றனர்....!!!!
அறிமுகம் இல்லா உறவு
அறியாத இடம்
புரியாத மொழி
நடுங்கிய உள்ளத்தோடு
அவர்கள் இல்லம் போய்
சேருகின்றாள்...!!!!
தாயான அவள்
ஆயாவாக ஆனால்
பெற்ற பிள்ளையை
விட்டு பிறர் பிள்ளையை
தாங்கினாள்...!!!!
உள்ளத்தில் பொங்கிவரும்
வேதனையை விழி நீராலே
அணை கட்டினாள்....!!!
அன்பு காட்ட யாரும் இல்லை
உரிமையும் முழுமையாக
இல்லை ஊரார் வீட்டில்
எடுப்பார் கைப்பிள்ளை
ஆனாள்...!!!!
தாங்கிய பிள்ளையை
ஆசையாக இறுக்கமாக
அணைக்க முடியவில்லை
கோபத்தில் இரண்டு தட்டு
முதுகில் போட முடியவில்லை
பிள்ளையின் சிவந்த உடல்
பார்த்தால் மறு நொடியே
தனக்கு மரணம் நிச்சயம்..!!!
பயத்தில் பாதி பணத்துக்காக
மீதி என்று அக்கறை காட்டுகிறாள்
பிள்ளைமேல் தொடருகின்றது
ஆயாப் பணி...!!!
தனி அறையில் என்றும்
கண்ணீர் மழை பொழிகிறாள்
தான் பெற்ற பிள்ளையை
நினைத்து....!!!!
தன் பிள்ளை அம்மா
நினைவில் பொம்மையைக்
கட்டி அணைத்து தூங்கும்
கதை கேட்டதும் புளுவாகத்
துடிக்கிறாள் இறைவன் மட்டும்
அறியும் ரகசியம் இது...!!!
நெஞ்சினிலே குடி
இருக்கும் வறுமை
நினைவு வரவே
அனைத்தையும்
ஒதுக்கி விட்டு மன
வலியுடன் தொடருவாள்
பணியை...!!!
கடலில் தத்தளிக்கும்
படகாய் அவள் மனம்
உள்ளத்தில் மகிழ்ச்சி இல்லை
நிறைவான உணவு இல்லை
நிம்மதியான உறக்கம் இல்லை
சதா மனமும் மூளையும் பல
கதைகள் கூறும் தனக்குள்ளே..!!
உதடு சிரிக்கும் உள்ளம்
உள்ளே அழும் உடலோ
நடிக்கும் புத்தியோ
சிந்தனையில் சிறை பட்டு
விட வாழ்க்கைப் பயணத்தை
தொடர்கின்றாள் இரண்டாண்டை
எதிர் பார்த்தவண்ணம் ஆயாவாக...!!!!
02.
தகிக்கும் தனிமை
---------------------------
அன்புக்காக ஏங்குகின்றேன்
உண்மை அன்புக்காக ஏங்குகின்றேன்
ஒன்றே ஒன்று கேட்கின்றேன் அதுதான்
உண்மை அன்பு
பணம் இல்லை பாசம் இல்லை
பந்தம் இல்லை சொந்தம் இல்லை
சொந்த வீட்டில் நிம்மதி இல்லை
சென்ற இடத்தில் மதிப்பு இல்லை
வருவோரும் போவோரும் காட்டும்
அன்பு உண்மை இல்லை உறவு
என்று சொல்லி வரும் உறவும்
நிலைப்பது இல்லை நல்ல ராசி
இல்லை நான் என்ன செய்வேன்
தினமும் ஏங்குகின்றேன் உண்மை
அன்பைத் தேடுகின்றேன்
சோகத்துக்கு நான் தோழியானேன்
வெறுப்புக்கு நான் விருப்பானேன்
ஏமாற்றம் அது என் வீடானது இருந்தும்
என் இதயம் அதை ஏற்க மறுத்து அன்பை
நாடுகின்றது தேடுகின்றது
தினமும் ஏமாற்றம் விடிவு இல்லா
இருளாட்டம் முடிவில்லா தொடர்கதையாக
தொடரும் என் ஏக்கம்
03.
ஒரு சாண் வயிறு
------------------------------------
ஒரு சாண் வயிறுக்கு
மனிதன் தினம் தினம்
தேடலில் இறங்குகிறான்
பல வழியைத் தேடி ஓடுகிறான்.
ஆகாரம் கிடைக்காதவன்
விதி என்று புலம்புகிறான்
அடுத்த வேளை சாப்பாட்டுக்கு
உழைக்க மார்பை உயர்த்தி
சூளுரைக்கிறான்.
ஒரு சாண் வயிறு
இல்லை என்றால்
படைத்தவனாலேயே
மனிதனை அடக்க
முடியாமல் போகும்
பசி என்பதை தீர்க்கவே
உசாராகின்றான் உழைக்க
உடை விற்கிறான் பொருள் விற்கிறான்
உடம்பையும் சேர்த்து விற்கிறான்
கேள்வி எழுப்பினால் வயிற்றைக்
காட்டுகிறான் இதற்காகத்தான் என்று
சுய மரியாதை இல்லாமல்
கௌரவம் பாராமல்
உறவு மட்டும் இன்றி பிறரிடமும்
கை ஏந்துகின்றான் ஒரு சாண்
வயிற்றை நிரப்ப வழியில்லாமல்
மூச்சுப் போனால் உயிர் இல்லை
மூச்சு இழுக்கும் போதும் கடமைக்காக
என்று கூறி ஊத்துகின்றான் பாலை ஒரு சாண்
வயிற்றை நிரப்புவதிலே குறியாக
இருக்கின்றான் இறக்கும் தறுவாயிலும்
உண்மையைக் கூறி கேட்கிறான்
பொய் சொல்லியும் கேட்கிறான்
தட்டிப் பறிக்கிறான் உதைத்து வாங்குகிறான்
கொள்ளையும் அடிக்கிறான் கொலையும் புரிகின்றான்
வயிற்றுப் பிழைப்புக்கு என்று பெயர் சூட்டுகின்றான்
ஓராயிரம் குற்றம் புரிகின்றான்
சாட்சிக்கு ஒரு சாண் வயிற்றை
காட்டுகின்றான்.
அறிவு உள்ளவன் தன் வயிற்றையும்
நிரப்புகின்றான் பிறர் வயிற்றுக்கும்
சேகரிக்கின்றான் .
அறிவு கெட்டவன் தன் வயிற்றையே
போடுகின்றான் பட்டிணி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2014-12-31