Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

பனி காலத்து..அநாதரவாய்..ஆலோசனை

- ஜே.பிரோஸ்கான்

பனி காலத்து தேநீர்.. அநாதரவாய் பெய்த மழை.. ஆலோசனை பண்ணும் மனசு

01.
பனி காலத்து தேநீர்
------------------------------

அவர்கள் தூரமாக நின்று அழைத்தார்கள்
செவியுற்றேன்.
சிரிக்கவும, அழவும் சொன்னார்கள்
சிரித்துக் கொண்டே அழுதேன்
பின்
கண்களை திறந்து கொண்டு
உறங்கச் சொன்னார்கள்
உறங்கிக் கொண்டேன்.
தங்களது ஆறு கால்களைக் கொண்டு
என் கழுத்தில் மிதித்து விளையாட
ஆசையென்று மொழிந்து,
அழுத்தி அழுத்தி ஒருவொருக்கொருவர்
குழந்தையாகி மகிழ்வுற்றதையும்
நான் ரசித்துக் கொள்கிறேன்.
மீதம் வைக்க மனசு இல்லாத
பனிக்காலத்து த்ரீ ரோஷஸ் தேநீர் போல...



02.
அநாதரவாய் பெய்த மழை
----------------------------------

நம்பிக்கையூட்டும் மௌனத்தின் ஒலியை
சுமக்கும் ஒரு மழைக்கால இரவில்
அச்சமற்று துயிலே தயாராகுறேன்
பழகிப்போன தவளைகளின் கத்தளை மறந்தபடி.
இப்படியாய் பின் தொடரும் தூக்கத்தில்
கனவு காண்பதற்கான அறிகுறி தோன்றி மறைகிறது
மூடியே என் விழிகளுக்குள்.
இருளடைந்து தூசிபடிந்து கிடக்கும்
சிநேகங்களின் முரண் அவ்வப்போது
மின்னலாய்இ இடியாய் மழை இராக்கனவை வேகப்படுத்தியது.
ஆனால் நான் கனவை முறிக்கும் முயற்சியில்
துயில் களைந்தேன்.
அநாதரவாய் பெய்து கொண்டிருந்தது வெளியே மழை...



03.
ஆலோசனை பண்ணும் மனசு
-------------------------------------

இடை விடாது தொடரும்
மாரி மழை இரவுகளில் தான்
வெயிலை விரும்புவது பற்றி
ஆலோசித்துக் கொள்கிறது
தனியாக மனசு..
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2014-10-04


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • மாமிஷ தின்னி.. நாய்கள்.. வேக்கையன்
  • மழலைகளின் சிரிப்புக்குப் பின்னால்
  • இறுதிச் சடங்கு.. ஆல மரத்து.. அப்பாவின்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube