Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

இன்னும் கலையாமல்

கொஞ்சம்¢

- வேதா மஹாலஷ்மி

இன்னும் கலையாமல் கொஞ்சம்

- வேதா மஹாலஷ்மி

படிகளில் பார்க்காமல்
பார்த்ததில் கொஞ்சம்,
உன் பரவசத்தை
பார்த்தும், பார்க்காததில் கொஞ்சம்...

மனசோடு மனசாகப்
பேசியதில் கொஞ்சம்,
மவுனமாய் மருகியே
பேசாததில் கொஞ்சம்...

இளம் மாலையில் இன்பத்தில்
இணையாய் நடந்ததில் கொஞ்சம்,
துளிர் காலையில் துன்பத்தில்
துணையாய் கிடந்ததில் கொஞ்சம்..

கலைய வைத்து நானும்
கலைந்ததில் கொஞ்சம்,
காத்திருக்கும் என் கனவுகள்
கலையாததில் கொஞ்சம்,

உன் அன்பைத் தேடி
அலைந்ததில் கொஞ்சம்
அருகாமை தேடி
அலையாததில் கொஞ்சம்,

ஊசி முனையில்
உன் உள்ளத்தில் நுழைந்ததில் கொஞ்சம்,
உயிரோடு உறைந்தும் உன் கருணை
உருகி வழியாததில் கொஞ்சம்,

புதிதாய் உன்னைக் கவிதை
புனைந்ததில் கொஞ்சம்,
புதிரான உன் புன்னகையை மட்டும்
புனையாததில் கொஞ்சம்,

மூச்சுத்திணற உன் முத்தத்தில்
நனைந்ததில் கொஞ்சம்,
உன் இளமையின் யுத்தத்தின் சத்தத்தில்
நனையாததில் கொஞ்சம்,

ஈருடல் ஓருயிராக
இணைந்ததில் கொஞ்சம்,
இன்னமும் முழுவதும்
இணையாததில் கொஞ்சம்,

கவிதைக் கள் உண்டு
மலர்ந்ததில் கொஞ்சம்,
கள் கொண்ட பூக்கள்
மலராததில் கொஞ்சம்,

அத்தனையும் உனக்காய்
அணைத்ததில் கொஞ்சம்,
தித்திக்கும் தீண்டல்கள்
இன்னும் அணையாததில் கொஞ்சம்,

இனிமையும் என் இளமையும்
தீர்ந்ததில் கொஞ்சம்,
தனிமையும் உன் தாகமும்
தீர்க்காததில் கொஞ்சம்,

உன் வசியத்தோடு
வாழ்ந்ததில் கொஞ்சம்,
வாசத்தோடு வாழாததில் கொஞ்சம்,

நினைவுகள் நெஞ்சில்
நிறைந்ததில் கொஞ்சம்
உன்னால் இன்னமும்
நான் நிறையாததில் கொஞ்சம்

பசி போக்கும் உன் பசலை
குறைந்ததில் கொஞ்சம்
பருவத்தால் என் பருவம்
குறையாததில் கொஞ்சம்

இப்படியே...
கொஞ்சலும் கெஞ்சலுமாய்
துள்ளலும் துடிக்கலுமாய்
பார்த்துப் பார்த்துக் கட்டிய கூட்டை
பட்டென்று கலைத்துவிட்ட
உன் பண்பாட்டு மொழிகளால்
பாராமுகங்களால்
உள்ளம் உடைந்ததில் கொஞ்சம்,
உடையாததில் கொஞ்சமுமாய்
எனக்கும் உனக்கும் சேர்த்து...
கொஞ்சம் கொஞ்சமாய்
இறுதிவரை,
காதலித்துக் காத்திருப்பேன்
கண்களில் கனவுகளோடு - அழகான
நம் நினைவுகளோடு!!!!

veda
piraati@hotmail.com
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-11-21


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • பூ
  • நலம்...நலமறிய ஆவல்!!
  • பரவசமானேன்
  • என் தோட்டத்தில் நீ!

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube