வெறும் கற்குவியலாய்
-------------------------------
எண்ணற்ற ஒழுங்குகளை
கருக்கொண்டிருந்த பாறையில்
வேண்டாதவை என
தான்
வரையறுத்துக்கொண்ட பகுதிகளை
களைந்தேடுத்தவாரிருக்கிறான் சிற்பி
ஒன்று இறுதி செய்யப்பட்டபின்
மற்றொன்று வெளியேறிவிடுவது
என்பதான நியதியின்படி
உளி பிளக்க
நிலம் சேருகின்றன
ஏனைய ஒழுங்குகள்
ஒழுங்கற்றவையாய்
வெறும் கற்குவியலாய்.
- ப.தியாகு
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-02-27