பரிணாம வளர்ச்சியின் ஒரு சுற்று.. வெட்டுக்கிளி
01.
பரிணாம வளர்ச்சியின் ஒரு சுற்று
---------------------------------------
நிறைவாய்
நீளமானதொரு வாலை
இணைப்பதோடு முற்றுப்பெறுகிறது
பலூன்காரன் போர்வையிலிருந்த
மனிதன்
குரங்கை சிருஷ்டித்தல்
அவன் வரைக்கும்
ஒரு சுற்று கண்டிருந்தது
யுகங்கள் பலவாய்
வளர்ந்து கொண்டே வந்திருந்த
பரிணாமம்.
02.
வெட்டுக்கிளி
----------------
உந்தி எழுகையில்
துகள்கள் அலைய
கிளறப்படும் கொஞ்சம் மண்.
உருவாகுமவ்விடம்
கடை விரல் நுனியளவில்
சிறு பள்ளம்
கண் சிமிட்டும் நேரம்
காணாமல் போகும்
வெட்டுக்கிளி
பள்ளத்தில் தேங்குமென்
மனம்
- ப.தியாகு
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-07-03