Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

வசந்தம்

- தேவஅபிரா

வசந்தம்

பூமியின் ஆழத்தில் இருந்து காதல்
நெடுமரங்களின் வேர்களுள் புகுந்து மேலெழுந்து
வசந்தத் துளிர்களின் நடுவில் மலர்களாகிறது.
வேனிலின் அசைவற்ற மௌனத்தில்,
வெம்மையில்
ஒவ்வொன்றாக விழுகின்றன மலர்கள்
நிலம் மறைகிறது.
ஏக்கம் கடலில் ஆவியாகி
விசும்பின் உயரத்தில் திரண்டு
விம்மி வெடிக்கிறது.
நெடுமூச்செறிந்து ஆவிபடரும் மண்ணின்
ஆன்மா அடங்குமோ!
துளிகள் சொட்டும் காலையில்
ஒற்றைக் குயிலின்
தீராக் குரலிலும் சிதைகிறது
வசந்தம்.

சித்திரை - 1995
தேவஅபிரா
puvanendran@home.nl


*****

வெளிவர இருக்கும் "இருண்ட காலத்தில் தொடங்கிய என் கனவுகளும் எஞ்சி இருப்பவைகளும்" தொகுப்பிலிருந்து .

இத் தொகுப்பை இலங்கையில் இருக்கும் நிகரி வெளியீட்டகம் வெளியிடவுள்ளது. எனது கவிதைகள் ஏற்கனவே சரிநிகர், மூன்றாவது மனிதன், திண்ணை, விளக்கு, ழகரம், ஒளி, திசை போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • ஆழியின் சிரிப்பு
  • தேடல்
  • காதல்
  • மழையெல்லோரெம்பாவாய்..
  • வாழ்வும் மரணமும்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube