வாழ்வும் மரணமும்
தளிர்களும் வேர்களும்
மீள நீளத் துடிக்கும்
சித்திரையின் இரவில் உங்கள் மரணம் கேள்வியுற்றேன்
முரணணியோ வாழ்வு
வன்மமானது வாழ்வன்று
வலிவே வாழ்வானது என்றும் உங்களுக்கு
விட்டுக் கொடா வார்த்கைகள் நிறைந்தவுங்கள்
வாயாடல் அறிவேன்
இட்ட போர் அறிவேன்
இடாப் போரும்
மூட்டிய மூச்சின் இறுதிக் கணமும் அறியேன்
உன்னதமான கவிஞனின் துயரங்களுக்குத் து£ணாகவும்
உயர்ந்த கவிஞர்களின் பெருமைகளுக்குத் தாயாகவும்
வாழ்ந்த உங்கள் வாழ்வின் காலடியில்
மரணம் தலைகுனிகிறது
தேவஅபிரா
14 சித்திரை 2004
மகாகவி உருத்திரமூர்த்தி அவர்களின் துணைவியாரின் மரணத்தின் நினைவாக
- தேவஅபிரா
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-11-07