ரயில் நிலையப் பாடகன்
சத்தி சக்திதாசன்
கைகளிலே வாத்தியம் அவன்
கண்களிலே ஓர் கூர்மை
கலைந்து பறக்கும்
கேசத்துடன்
கானமிசைக்கும் இவன் ரயில் நிலையப் பாடகன்.
வீடின்றி அலைபவனோ இல்லை
விட்டெறிந்து வந்தவனோ !
பிழைக்கும் வழிதெரியா நாகரீகப்
பிச்சைக்காரனோ !
பிளாட்பாரப் பாட்டுக்காரனோ ?
பின்னென்ன , இவன் ரயில் நிலையப் பாடகன் .
சத்தத்துடன் துணியில்
சர்ரென்று உருளும் நாணயங்கள்
சம்பளமின்றிப்பாடும்
சவரம் செய்யா இவன்
சத்தியமாய் ரயில் நிலையப் பாடகன்.
விதியின் வேகத்திற்கு
விலயாகியவனோ அன்றி
வீணே தன் வாழ்க்கையை
விரயம் பண்ணுவனோ , இவன் ரயில் நிலையப்பாடகன்
தேவைகள் இல்லாதவன் அதனால்
தேடியலையாதவன்
சொந்தங்கள் இல்லாதவன் அதனால்-பொருள்
சேர்ப்பதை நம்பாதவன் - இவன் ரயில் நிலையப் பாடகன்
அவன் வாழ்வின் சுதந்திரம் கண்டு
அலயும் பல ரயில் பயணிகள் மனமே
மனத்தை நிறைக்கும் சோகங்கள் மறையும் மட்டும்
மயக்கமிக்கும் பாடல்கள் நிறைக்கும் ரயில் நிலையத்தை
சொத்துக்கள் வேண்டாம் - அவை தரும்
சோதனைகளும் வேண்டாம்
சொந்தங்கள் வேண்டம் - அவை மூலம்
தீராத மனக் கவலைகளும் வேண்டாம்
இவன் வாழ்க்கையைச் சரியாய் புரிந்து கொண்டான்
இவன் ஒரு ரயி நிலையப் பாடகனே !
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01