என்றும் காதலனாய்...!
---------------------------
கன்னியாய்க் கண்டேன் - பின் உன்னை
கல்யாணப் பெண்ணெனக் கண்டேன் !
இன்று...
கருவுற்ற இளமயிலாய் காண்கிறேன்;
நாளை...
கருணைப் பாலூட்டும்... தாயென்றும்
காண்பேன் !!
என்றும் மாறாத...
காதலனெனும் நிலையிலிருந்து...!
02.
காய்ச்சல் வேணும்...!
-------------------------
அன்று வந்த காய்ச்சலே...
பல முறை வர வேணும் எனக்கு!
முடியாமல் போன போது....
என் அம்மாவே எனக்கு ஊட்டி விட்ட
அப்பரிஸம்...
பல முறை நிகழ்வதற்கு...
அன்று வந்த காய்ச்சலே...
பல முறை வர வேணும் எனக்கு!!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-12-02