Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

என் அப்பாவின் கனவு இல்லம்

- ரஞ்சினிமைந்தன், திருப்பூர்

என் அப்பாவின் கனவு இல்லம்...!
----------------------------------------------

வாடகை உலகம்
தந்த வாழ்க்கையில்
சொந்த வீடு கட்டத்தான்
விருப்பமுண்டு எல்லோர்க்கும்

ஆசைதான் துன்பமென்று
புத்தனது வார்த்தையினை
அறிந்திருந்தும் கூட
என் அப்பாவுக்கும் - ஓர் ஆசை!

குச்சு வீட்டில் ஆரம்பித்த
தன் வாழ்க்கை பயணத்தை
ஒரு மச்சு வீட்டில் முடித்திடவே
அவருள் வைராக்ய ஒளி அலைகள்

சில லகரம் தேற்றி
இரண்டு அடுக்கு வீடொன்று
கட்டி விட்டு கைப்பார்த்தால்
தேய்ந்து போன ரேகைகள்...

திருமணம் ஆகிட்ட
திருநாள் முதல்தொட்டு
சொந்த மனை கட்டிடவே - அவர்
செல்லெல்லாம் கனவுகள்

லட்சியம் எட்டிடவே
சில லட்சம் வேண்டுமென
உழைத்தே திரிந்ததால்
ஓய்ந்துபோன உணர்வுகள்!

தரையடுக்கு கட்டி
பூஜை போட்டு முடிக்கையிலே
கைக்காசு கரைந்து
செலவு கையை கடிக்கையிலே...

மாத வட்டிக்கு
கைமாத்தாய் சிலகாசு...
மாடிகட்டி முடிக்கையிலே
அப்பா...கடனாளி ஆயாச்சு!

இத்தனை கஷ்டத்தில்
கட்டிய அவ்வீடு...
அவர் வாழ்வை பேசும் - ஒரு
சரித்திர பேரேடு!

மண்ணோடு மண்ணாகி
இடுகாடு போனாலும்
மனிதர் விட்டு செல்லும்
வீடு மட்டும் நம்மோடு!

அப்பாவோட வீடு
அடுக்குமாடி வீடு…
அதை பங்கு போடுவதே - வீணான
பிள்ளைங்க பாடு!

அப்பாவின் உணர்வெல்லாம்
நிதமும் இது சொல்லும்!
அதற்கெல்லாம் காரணம் - இது
அவர் கனவு இல்லம்!!!


-ரஞ்சினிமைந்தன்,
கணக்கம்பாளையம், திருப்பூர்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-01-22


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • அவளுக்கு விடியல்
  • என்றும் காதலனாய்.. காய்ச்சல்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube