அங்கீகாரம்
-----------------
காவிரி டெல்டா
பேருந்து பயணம்
ஒரு புறம் காவிரி
மறுபுறம் கொள்ளிடம்
இடையில்...
கரும்பு
நெல்,
உளுந்து,
பச்சை பயிர்,
முள்ளங்கி,
எள்,
பருத்தி,
வேர் கடலை...
என பயிர்கள்
விளை நிலங்களில்!
நடுவில்
உறுத்தலாக
விளம்பர பலகையில்
"அண்ணாமலையார் நகர்
அரசு அங்கீகாரம் பெற்ற
வீட்டு மனைகள்- விற்பனைக்கு!"
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-08-30