ஆழியின் சிரிப்பு
பெருவிசும்பின் தொன்மையின்கீழ்
மரத்தூரிகைகள் உலையும் காற்றில்
மரணத்தின் கேள்வியை விட
மரணித்தவர்களின் கேள்விகள் வலுக்கின்றன...
கையறு நிலையின் காலம்
அதோ என் வெப்பத்தை எடுத்துச் செல்கிறது.
இவ்வெளியோ மண்ணோ எனதல்ல.
நான் உங்களைக் கேட்க விரும்புவதெல்லாம்:
என் கால் நனைத்த என்கடலின் மண்துகள்கள்
தட்டிப்பிரிந்த அக்கடைசி நாளில்
கடல் என்னைப்பார்த்துச் சிரித்ததா?
ஐப்பசி 2002
-தேவஅபிரா
puvanendran@home.nl
****
வெளிவர இருக்கும்
"இருண்ட காலத்தில் தொடங்கிய என்
கனவுகளும் எஞ்சி இருப்பவைகளும்" தொகுப்பிலிருந்து .
இத் தொகுப்பை இலங்கையில் இருக்கும் நிகரி வெளியீட்டகம் வெளியிடவுள்ளது. எனது கவிதைகள் ஏற்கனவே சரிநிகர், மூன்றாவது மனிதன், திண்ணை, விளக்கு, ழகரம், ஒளி, திசை போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.
- தேவஅபிரா
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01