Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

வழியனுப்புதல்

- றஹீமா-கல்முனை

வழியனுப்புதல்.....!
--------------------------------

"அட்மிஷன்வந்தாச்சா??"
என்பதிலிருந்து துவங்கும்

பரீட்சை பற்றிய
வாப்பாவின்
விசாரணை.....!!!

தொலைக்காட்சியிலும்
பத்திரிகையிலுமாய்.....
வீணே
உழன்று திரிகையில்....
எதையாச்சும் படியேன்!!
என்கிற
கண்டிப்புகளில்
ஆயிரம் ஆயிரம்
அக்கறையிருக்கும்!!

பேனா,பென்சில்
ஆளடையாள அட்டை
அட்மிசன்
வரைக்குமாய்
அத்தனையும் எடுக்கச்சொல்லி
எந்நேரமும் எச்சரித்து....
சிலநேரம் எரிச்சல் ஊட்டி...

"நேரத்தோடு தூங்கி
நேரத்துக்கு எழச்சொல்லி"
பரீட்சைக்கு முதல் நாளே
கண்டிப்பாய் உத்தரவிட்டு

"எதற்கும்
ஒன்றுக்கு இரண்டு
பேனாவை எடுத்துவை "-என
எச்சரித்தபிறகும்
பரீட்சைக்கான
அவசரத்துக்கு நடுவில்
காலையில் எழுந்துதான்
எழுந்துதான்
பேனா வேணும் என்பேன்!!!

கடிந்து....
அவசரமாய்
கடைக்கு விரைந்து....
பேனா வாங்கி
எழுதிப்பார்த்து....
இடைவெளியில்
கொண்டு சேர்த்து...
வழியனுப்பிவிட.....
இன்றைக்கு வாப்பா.........
இல்லை!!!!!!

உங்கள்
வழியனுப்புதல் இல்லாத
எனது முதல் பரீட்சை!

எனக்கான
எல்லாபரீட்சைகளும்
இனி இப்படியேதான்
தொடரப்போகிறது
வாப்பா!!!!

பல்கலைக்கழக
இறுதிப்பரீட்சைக்கு
வழியனுப்ப...
இறுதியாய் பஸ் ஹோல்ட் வரை
வந்தது..
இப்போதும்
நினைவில் உண்டு...!!!

வேடிக்கையை பாருங்கள்
பட்டதாரியானபிறகும்
வேலைகொடுக்க பரீட்சை
வைக்கிறார்கள்
இப்போது இருந்திருந்தால்
வேடிக்கையாய்
சிரித்திரிப்பீர்கள்.....

எல்லாம் எடுத்த பிறகும்
பாதி திருப்தியோடுதான்
பரீட்சை தொடரும்
உங்கள் வார்த்தைகள்
மோதுண்டு விழுகின்றன......

சிரமங்களுக்கு நடுவில்
படிக்கவைத்து
பரீட்சைக்கும் வழியனுப்பிவிட்டு
பெறுபேறுகள் வர முன்னமே
வாழ்க்கை முடிந்துபோய்....

எனது பெறுபேறு.....
எனது பட்டமளிப்பு விழா..
எனது வேலை....
எனது வாழ்கை...
என
பின்னரான
எந்த சந்தோசங்களையும்
பகிர்ந்து கொள்ளாமல்...
ஊர் உலகில்..
நம்மைப்போல்
எத்தனை

வாப்பாவும் மகள்களுமோ...!!!!!

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-05-31


amjadfha

17 years 5 months ago

வந்தனங்கள் றஹீமா,

உங்கள் கவிதைகளை வாசிக்க ஆரம்பிக்கும் போதெல்லாம் நம்மை அதில் தொலைக்கத்தான் போகிறோம் என்று மனசு சொல்லிவிடும்.

இதில் நிகழ்ந்தேறியதும் அதுதான்.....

நீங்கள் எழுதியது நிஜம்.

அழுது விட்டேன்.....

இப்படிக்கு,
அம்ஜாட்.

நிர்வாணி

17 years 5 months ago

கிட்டத்தட்ட 26 வருடங்களுக்கு முன்னோக்கிய வாழ்வை இழுத்துவந்து இழப்பின் வலியை கிளறிவிட்டுச் சென்றது உங்கள் கவிதை. எல்லாக் குழந்தைகளுக்கும் இப்படியான அப்பாக்கள் அமைந்துவிடுவதில்லை என்ற ஒரு பக்கமும் இருக்கிறது. அருமை.

Faizal-kalmunai

17 years 1 month ago

உங்களின் கவிதைகள் fantastic....
எழுதுங்கள் please...........
உங்களின் கவிதைகள் தொடரட்டும்..............
wish you all the best

Faizal

raheema faizal

16 years 2 months ago

கருத்துக்களை தெரிவித்த பைஷல்,அம்ஜத்,நிர்வாணி,அனைவருக்கும் நன்றிகள் rnrn

Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • சோதனைச் சாவடி
  • கண்கெட்டபிறகு
  • வெளிநாட்டுச் செய்திகள்
  • மௌனம்
  • விடை பெறுதல்
  • திருமதி . தொலைக்காட்சி

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube