Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

நிழல் தேடும் மரங்கள்

- சாந்தினி வரதராஐன்

நிழல் தேடும் மரங்கள்
.......................

விதைத்த விதை வெடித்து
விருட்சமாக வளர்ந்து
விழுதுகளை பரப்பி
நிழலை அளித்த மரங்கள்
துளிர்த்த இலைகள் பழுத்து
நிலத்தில் விழும்பொழுது
நிஜத்தை மறந்த மனித
மனதை தேடும் மரங்கள்.

மண்ணில் அன்று குழந்தை
வளர்ந்த பின்பு மனிதன்
தன்னை வளர்த்த மண்ணை
சுவடு பதித்த நினைவை
எண்ணி பார்க்க இன்று
இதயம் இல்லா மனிதன்.

உலாவரும் நிலவைப்போல
உருகிவாடும் மரங்கள்
நிலாவிடம் தூது செல்லும்
தம் நிஜத்தை உரைக்கச் சொல்லும்
தேய்ந்திடும் மதிகளெல்லாம்
தேயும் காலம் கழிந்த பின்னும்
வளர்ந்திடுவோம் என்ற எண்ணம்
மனதில் எண்ணிக்களிக்கும்
மதிகெட்ட மனிதம் மட்டும்
வயது எல்லை கடந்த பின்னும்
புதிதாய் பிறப்பதில்லை
பு£¤ந்து கொள்வாய் மனிதா!
கடந்ததை எண்ணி எண்ணி
புலம்பும் நிலையை நீயும் கடந்து
நிஜங்களை தேடித் தேடி
நீட்சமாய் செல்வாய் மனிதா.

ஏற்றமுடன் நல் கருத்து
என்னுள் எழும் பொழுது
தேற்றமுடன் நானும்
எடுத்துரைக்கும் மரம் நான்
வாட்டமின்றி தமை வருத்தி
உமை வளர்த்த மரங்கள்
தம் நிழலை தேடித் தேடி
அலையும் நிலையை அறிந்தும்
அறியா மனதம் இன்று
அகதியாக இங்கு..............


சாந்தினி வரதராஜன்
ஜேர்மனி.

பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01


PONGIRI

14 years ago

rnவணக்கம் சாந்தினி .rnதங்கள் தமிழுக்கும் கருத்துக்கும் , எண்ண அலைகளுக்கும் rnஎன் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் . என்றும் நெஞ்சில் rnநிற்கக் கூடிய வார்த்தைகள்.தொடரட்டும் உங்கள் தமிழ் பணி .rnஎன் கவிதைகளை பார்க்க www.eluthu.com சென்று ரசிக்கவும்.rnrnபழனி குமார் rn

Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • மழைக்கு தெரியாது
  • வரம் வேண்டும் தாயே

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube