நிழல் தேடும் மரங்கள்
.......................
விதைத்த விதை வெடித்து
விருட்சமாக வளர்ந்து
விழுதுகளை பரப்பி
நிழலை அளித்த மரங்கள்
துளிர்த்த இலைகள் பழுத்து
நிலத்தில் விழும்பொழுது
நிஜத்தை மறந்த மனித
மனதை தேடும் மரங்கள்.
மண்ணில் அன்று குழந்தை
வளர்ந்த பின்பு மனிதன்
தன்னை வளர்த்த மண்ணை
சுவடு பதித்த நினைவை
எண்ணி பார்க்க இன்று
இதயம் இல்லா மனிதன்.
உலாவரும் நிலவைப்போல
உருகிவாடும் மரங்கள்
நிலாவிடம் தூது செல்லும்
தம் நிஜத்தை உரைக்கச் சொல்லும்
தேய்ந்திடும் மதிகளெல்லாம்
தேயும் காலம் கழிந்த பின்னும்
வளர்ந்திடுவோம் என்ற எண்ணம்
மனதில் எண்ணிக்களிக்கும்
மதிகெட்ட மனிதம் மட்டும்
வயது எல்லை கடந்த பின்னும்
புதிதாய் பிறப்பதில்லை
பு£¤ந்து கொள்வாய் மனிதா!
கடந்ததை எண்ணி எண்ணி
புலம்பும் நிலையை நீயும் கடந்து
நிஜங்களை தேடித் தேடி
நீட்சமாய் செல்வாய் மனிதா.
ஏற்றமுடன் நல் கருத்து
என்னுள் எழும் பொழுது
தேற்றமுடன் நானும்
எடுத்துரைக்கும் மரம் நான்
வாட்டமின்றி தமை வருத்தி
உமை வளர்த்த மரங்கள்
தம் நிழலை தேடித் தேடி
அலையும் நிலையை அறிந்தும்
அறியா மனதம் இன்று
அகதியாக இங்கு..............
சாந்தினி வரதராஜன்
ஜேர்மனி.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01