Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

விகாரமும் கடவுளும்

- செயவேலு வெங்கடேசன்

விகாரமும் கடவுளும்
--------------------------------

மனதின் விகாரத்தோடு,
பல்லவனில் பயணித்தபோது
மகளிர் இருக்கையை
கல்லூரி மாணவிக்கு விட்டுகொடுத்தேன்
சுயநலமாய்
காற்றில் பறக்கும் மேலாடையின் ஊடே
தெரியும் மார்பகங்களை பார்க்கலாமென்று
என் வெறித்த விழியின்
ஆகர்ஷனத்தின்பால் இறுக்க
மூடினாள் மேலாடையை
கற்பின் சதவீதம் களவாடபடுகிறதென்று,
தன்னிச்சையாய் திரும்பிய பார்வை
நிலைத்து நின்றது
பக்கத்து இருக்கையின்
குழந்தை முட்டும் தாயின் ஒதுங்கிய
சேலை மாராப்பில்……..
கற்பின் சதவீதம் களவாடபடுவதை விட
சேயின் விளையாட்டு அமைதியில்
மறுதலிக்கப்பட்டது என் பார்வையின் ஆகர்ஷனம்
அமைதியாய் பக்கம் நின்ற
இரவிக்கையே அறியாத
மூதாட்டியின் சமுதாயத்திற்காக சேலை சுற்றின்
காணும்வரை …..
பிடிபடவில்லை கற்பின் சூத்திரம்
புத்தனாய் யோசிக்கிறேன்……
கற்பு என்பது
மனதா? உடலா? அனுபவமா?
மனதெனில் மூவருக்கும் பொதுவே!
உடலெனில்! மனதின் களங்கம் அங்கீகாரம்,
அனுபவமெனில்! கற்பு எங்கே?
மனவிகாரம் கூட தவறேயில்லை
உள்வாங்கி கடக்கையில்
கடவுள் உண௫ம்வரை!....


-செயவேலு வெங்கடேசன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-07-15


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • பெண் நட்பு பற்று தீ
  • களவு கூட சந்தோஷம்தான்
  • பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube