பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு மீமாம்ச வேதமாய்
------------------------------------------------
“மீமாம்ச” வேதம் நம் தாய் மொழியில்...
யாரும் அறியாமல், நெடுங்கால அமைதியுடன்,..
கீதையின் அத்வைத தத்துவத்தில் கரைந்து
மீமாம்சமாய் என்ற பெயரில்.
இவை அனைத்தும் அந்நிய மொழி ஆங்கிலத்தில்
ஆர்பாட்டத்துடன்...அனைத்தும் அறிந்ததாய்!..
நம் அறியாமையின்? ஊடே!
உதாரனமாய்,.
“பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு”
திரைபடத்தில் அயல்மொழியுடன்,...
“மீமாம்சம்” பகிரும்-
காரியம் தொடர்ந்த காரணத்தின்,
காரணம் தொடர்ந்த காரியத்தின்,
அணுவின் சங்கிலி தொடர் நிகழ்வின் நிழலாய்.
அனைத்தும் மறந்து.
அயல் மொழியின் அதீத பற்றுடன்,
“காலத்தின் சுருக்க வரலாற்றில்”-
ஒளி வேக பயணம்
வயது இன்மையாய்,
கடவுளும் கடவுளின் வாகனம் பற்றிய
தாய் மொழி வாய் வழி கதைகளை
மறந்து!
அனுவின் விளையாட்டு
அயல்மொழி அறிவியலுடன்
ஐரோபிய நியுகிலியார் ஆராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாய்
அறியும் முயற்சியில்,
“அத்இ த்இ வைதமாய்” கீதையில் உள்ளதை,
அறியாமை என்று மறுதலித்து.
அனைவரின் கூற்றும் ஆராய,
வயசும் இன்றி அனுபவமும் இன்றி,
படித்தவை தொக்கி நிற்க
கேள்வியாய்?...
இவை அனைத்தும் ஆறரிவு பரிணாமத்தின்
தானமாய்.
அறிவியல் கூற்றாய்
எதிர்காலத்தில் ஏழறிவு பரிணாமம்
இயலுமெனில்,
நிகழ்கால அறிதல் கூட,
எதிர்மறையாகலாம்!.
ஏழறிவின் பரிணாமத்தால்……….
எனில்,
நிகழ்கால வாழ்வின்
அறிவியல்.
அறிவு இயல்
தத்துவம்
நீங்குதல் இனிதே!...
-க.செ.வெங்கடேசன்
அபுதாபி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-01-22