மண்ணின் குழந்தைகள்
எப்போதும் போல்
வாழ்க்கை இல்லை
வாழ்க்கையின் அளவு
புரிதல் இல்லை
அப்போது போல்
எல்லாமும் இல்லை
இருந்ததும் எப்போதும்
தொடர்ந்ததும் இல்லை
எல்லோரும் போல்
நானும் இல்லை
இருப்புக்கான நம்பிக்கை
எங்கும் இல்லை
மனங்களின் ஆழத்தில்
கவிந்தது போல்
மரண பயம் - ஒரு
மனப் பிரக்ஞை
யாரைப் பார்த்தாலும்
காற்றில் அசையும்
நிழல்கள் போல்
நினைவற்ற தோற்றம்
புழுதித் தரையில் - கீறி
முளைத்த புல் போல்
கீழ் வானத்து செம்மை தேடி
இன்றும் நான்
- இளந்திரையன் -
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01