இவர்களெல்லாம்...
காற்றலையில்
சேதி சொல்லும்
மனம் அழுது
கண் துடைக்கும்
பத்துப் பேர் பலி
பயங்கரவாதம்
குண்டு வெடிப்பு
குவிந்தது
பிணமலை
கட்டிடக் காட்டினுள்
கற் குவியலுள்
காணாமல் போயினர்
பரிதாபம்
ஆயிரம் போதுமா?
பத்தாயிரம் அனுப்பு
பாதுகாப்புப் (!)
படைகள்
மண்ணின்
முதல்வர்கள்
மதத்தின்
தலைவர்கள்
பணத்தின்
முதலைகள்
இவர்களெல்லாம்...
எந்தக் கிரகத்து
தேவர்கள்
இன்னும்
எங்கள் பூமியில்
யுத்தங்கள்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01