அன்பின் தாழ்...
----------------------
சுட்டெறிக்கும்
சூரியனையே
சுட்டெறித்தது - அந்த
று மணிநேர
அக்னி விவாதம்
அவை நடுவே...!
நீயும் நானுமாகிய
செம்புலப்பெயல் நீர்
அன்பும் அறனுமாக
நீதிமன்றத்தின்
கூண்டுகளில்...!
சபை நடுவே
அன்பின் தாழ்திறந்த
அற்புத நேரங்கள்...
சிலகேள்விகளுக்கு நீயும்
பல கேள்விகளுக்கு நானும்
உள்ளும் புறமும்
அழுத தருணங்கள்...!
அப்போது தான்
புரிந்தது...
“நாம்” என்பதை மறந்து
நீயும் நானுமாகி நின்று
அன்பின் தாழை
அடைத்துவிட்டோம் என்று...!
வள்ளுவம் பொய்த்ததும்
வாழ்வியல் பொய்த்ததும்
அன்பின் தாழ்
அடைபட்டதாலா?
- இரவி கோகுலநாதன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-07-07