Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

வேண்டும் “வானுவாட்டுக்கு” ஓர் ஒருவழி

- இரவி கோகுலநாதன்

வேண்டும் “வானுவாட்டுக்கு” ஓர் ஒருவழி பயணச்சீட்டு!
---------------------------------------------------------------

லெமூரியா கண்டத்தையும்
சிந்துச் சமவெளியையும்
கடல் கொய்ய - மிச்சம்
விடப்பட்ட எச்சங்களாய்
இன்றைய நாகரிகம்!

கற்கால மனிதனாய்க்
காடுகளில் திரிந்தவனைத்
தற்காலத் திறனாளனாய் - மாற்றிய
நிஜங்களின் நிகழ்வு!

மனிதர்களுடன் மட்டுமே
அணுக்கமாய் இருந்தவன்
அணுவைக் கண்டுபிடித்ததன்
மகத்தான அற்புதம்!

காடுகள் நகரமாக
நகரங்கள் நரகமாக
“கான்கிரிட்” சுவர்களாலேயே
மூடப்படும் “கான்கிரிட்” சுவர்கள்!

சுவாசிப்பதற்கு மட்டுமே
இருந்த காற்றைக் - குளிரூட்டி
அறையில் அடைக்க
அகண்ட வான்வெளி
வெப்பமண்டலமாய்
மாறிப்போனதன் எதார்த்தம்!

ஊர்திகளின் நெருக்கத்தால்
ஊர்ந்து கொண்டிருக்கும்
மாசுவின் மாட்சி!

காற்று மண்டலமே
கரியமில வாயுவாகி
ஓசோன் படலத்தின்
ஓட்டை வழியே காணப்படும்
பூலோக உருண்டை!

கார்காலம் கோடையாகி
கோடையிலே “நர்கிஸ்” தாக்க
தடம்புரண்ட தட்பவெட்பம்
பூமித் தட்டுகளை இடம்பெயர்க்க
சீற்றமிகு சுனாமி
இந்துமகா சமுத்திரத்தை
முத்தமிட்டு வங்கக்கடலுடன்
சங்கமித்த சரித்திரம்
மனித விந்தைகளின் விசித்திரம்!

நாளை விதிக்கப்படலாம்
உனக்கும் எனக்கும்
கற்காலம்! - அதற்குமுன்
ஒரு நிமிடம்!

ஏ மனித இனமே
உனக்குத் தெரியுமா
உலகில் மகிழ்ச்சி
நிறைந்த தேசம் எதுவென்று?
தென் பசிபிக் கடலின் நடுவில்
எண்பது தீவுகளில் பரவிக்
கிடக்கும் இரண்டு இலட்சத்து
இருபத்திரண்டாயிரம் மனிதர்களுடன்
இயற்கையோடு இணைந்து
இசை பாடிடும் தேசம்
வானுவாட்டென்பது...!

நேரமிருந்தால் சென்றுபார்
உன் நவீன மடிகணினி
உதவியுடன் - நீயே
உனக்கு நெய்து கொண்ட
வலைகளாகிய இணையதளத்தில்
அச்சுப்பலகையின் சி வழி
“ஹேப்பி பிளானட் இண்டெக்ஸ்”

அந்த தேசத்தின்
முக்கிய வருமானமே
விவசாயமென்றால்
நீ எள்ளி நகையாடுவாய்!
தனிநபர் சராசரி
ண்டு வருமானம்
யிரத்து அறுநூறென்றால்
நம்ப மறுப்பாய்...!

“மில்லியன்களிலும்
பில்லியன்களிலும்”
வர்த்தகம் புரியும் உனக்கு
பூலோகம் மட்டும் ஏனோ
இன்னமும் புரியவே இல்லை...!
நீ உன் உலகிலேயே
இருந்து விட்டுப் போ!

இயற்கையோடு இயற்கையாய்
இன்புற்றிருக்க - எனக்கு
மட்டும் வேண்டும்
“வானுவாட்டுக்கு” ஓர்
ஒருவழி பயணச்சீட்டு!


-இரவி கோகுலநாதன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-06-02


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • அன்பின் தாழ்
  • மனிதம்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube