திராவிடயாணம்.. வரலாற்றுக் குதிரை
01.
திராவிடயாணம்
--------------------
சீதையை
லங்காவிற்க்கு கடத்தினான்
திராவிடன் அன்று
இராமாயணம் தொடங்கியது
நவீன இராமன் அனுப்பிய
வானரப் படைகள்
திராவிடப் பெண்களின்
மார்பைக் குத்தி குத்தி குத்தி
குதறி குதறி எடுத்தது
எதிர்வினைப் புரிந்தாள்
திராவிட பெண்ணொருத்தி
தன் மார்பை வெடித்து
வீழ்ந்ததோராரிய விண்மீன்
தொடங்கியது திராவிடயாணம்
பதில் வினை
ஊயிர்ப் பெற்றது
இராமனின் அம்புகள்
நவீன சிதையின்
ஆயுத உதவி
வெடிக்கிறது
திராவிட இதயம்
குருதி பாய்கிறது
கடலில் வெள்ளமென
குளிர்கிறது
சீதையின் மனது
கடல்
நிறம்மாறி உருமாறி
புலியென பொங்கியெழுகிறது
தொடர்கிறது
திராவிடயாணம்.
02.
வரலாற்றுக் குதிரை
------------------------
குதிரைக்கு
கொம்பு முளைத்தால்
உலகம்
அழிந்து விடும்
திராவிடன் ஒலித்தது
கற்பனையல்ல
வரலாற்றுக் குதிரைக்கு
கொம்புகள்
முளைக்க வைத்தான்
ஆரியன் அன்று
அழிந்தது திராவிட
வரலாற்று நாகரீகம்
இன்றும்
ஈழதேசத்தை
அழித்து வருகிறது
ஆரியக் குதிரைகள்
கொம்புகளை நீட்டி
அன்பைக் கொண்டு
தேசத்தை பாதுகாப்பதால்
திராவிடனுக்கு
கொம்புகள் முளைக்கவில்லை
முளைத்தால்
ஆரியம் அற்றுப்போய்விடும்
-கு.சிதம்பரம்,சீனா
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-05-11