விரல்களின் பயணம்.. விழித்துக்கொள்
01.
விரல்களின் பயணம்
--------------------
அவனின் அய்ந்து விரல்களும்
அவசரமாக பயணம் செய்துக்கொண்டிருக்கிண்றன
ஆறாவது விரலை நோக்கி
அவனின் முதல் பயணம்
பதிமூன்று வயதில் தொடங்கியது
முப்பது வயதைக் கடந்தும்
அவன் விரல்கள் செல்லும் பாதையில் மாற்றமில்லை
ஆறாவது விரலைத்
தொட்டவாரே தொடர் யுத்தம்
இடை இடையை சில இடைவேலைகள்
அய்ந்து விரல்களின் அரவணைப்பில்
அடுத்த தலைமுறை ஆக்ரோசமாக வெளியேரியது
எங்கள் பெண்டீரை கொன்று
குவித்துவி;ட்டால் எங்கள் இனம்
மறைந்துவடுமென்று கனவு கான்கிறாயா?
மண்ணில் கலந்துள்ள
அவள் செல்களை சென்றடைந்து
என் தமிழினத்தை தளைக்கச்செய்யும்
என் வீரியமுள்ள விந்துக்கள்.
02.
விழித்துக்கொள்
-----------------
அம்மா என் தாய்மொழி
என்னம்மா?
ஏண்டா,உனக்கு
அதபத்தி இப்ப என்ன கவல?
இல்லம்மா சொல்லும்மா?
எதுக்குடா கேக்குற?
எங்க வாத்தியார் கேட்டாரும்மா
தமிழ்மொழின்னு சொல்லுடா
நாம பேசர மொழி
என்ன மொழிம்மா?
அதுவும் தமிழ்தாண்டா
தமிழ்மொழி பேசறவங்க
தமிழர்களாம்மா?
ஆமாண்டா
இலங்கையில பேசர மொழியும்
தமிழ்மொழியம்மா?
ஆமாண்டா
அப்ப அவங்க தாய்மொழியும்
தமிழாம்மா?
ஆமாண்டா
அப்ப அவர்களும்
தமிழர்களாம்மா?
ஆமாண்டா
அப்படின்னா ஏம்மா என்ன மாதிரி
பள்ளிகூடத்துல தமிழ் படிக்கிற
குழந்தைகளை இலங்கையில
குண்டுபோட்டு கொல்றாங்க?
சொல்லும்மா அப்படின்னா
எங்களையும் கொன்னுடுவாங்கலா?
சொல்லும்மா…
எங்களையும் கொன்னுடுவாங்கலா?
சொல்லும்மா…
தமிழ் படிக்கிற குழந்தைகளையெல்லாம்
குண்டுபோட்டு கொன்னுடுவாங்கலா?
சொல்லும்மா…
சொல்லும்மா…
சொல்லும்மா…
-கு.சிதம்பரம்,சீனா
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-04-28
உங்கள்
ஆறாவது விரல்
ஆறாத ரணம் ஒன்றை
நெஞ்சத்தில் கீறி விட்டது.
உண்மையில்
அந்த ஆறாவது விரல்
ஐந்து விரல்களின்
கூட்டுத்தொகையா?
பெருக்குத்தொகையா?
ஆம்.
வீட்டைக்
கூட்டிக்கொண்டும்
பெருக்கிகொண்டும்
இருக்கின்ற
அந்த "பெண்" எனும் சொல்லே
ஒரு பிழை திருத்தம்
போடப்படவேண்டிய சொல்.
முதல் எழுத்தை "க"
என்று தான் போடவேண்டும்.
பெண்ணியமே... ஒரு நாட்டின்
"கண்"ணியம்....அந்த
ஒளி படைத்த..உங்கள்
கவிதை வரிகள்
ஒவ்வொன்றும்
சட்டை செய்யாதவர்களின்
முதுகில் விழுந்த
சாட்டை வரிகள்!
அடுத்த கவிதையில்
ஒலிப்பதெல்லாம்
கேட்பதெல்லாம்
எதிரொலிப்பதெல்லாம்
தமிழின் குரலே தான்.
திருக்குறளை
தவறாக உச்சரித்தால் கூட
இனிக்கும்
"திருக்குரல்"என்று.
உங்கள் கவிதை
மழலைத்தமிழர்களுக்கு
தாலாட்டு பாடுவது போல்
இருந்தாலும்
ஒரு குழந்தை அல்லவா
இங்கே ஒரு
தாயாக நிமிர்ந்திருக்கிறது?
"சொல்லும்மா?
"சொல்லும்மா?
"சொல்லும்மா?
நீங்கள் மூன்று தடவை இப்படி
உசுப்பினாலும்
அது கிட்டத்தட்ட
ஏழெட்டு கோடி உசுப்பல்களுக்கு சமம்.
ஏனெனில்
உலகத்தமிழர்கள்
ஏழெட்டு கோடிகளுக்கு மேல் இருக்கிறார்களே.
அந்தக் குரல்கள்
ஓலைக்கிலுகிலுப்பையின் குரல்கள் தான்.
ஆனால் அவை வெறும்
ஓலக்கிலுகிலுப்பைகள் அல்ல.
உற்றுக்கேளுங்கள்
அதனுள்
வானத்து நட்சத்திரங்கள் எல்லாம்
நம்பிக்கையின் பரல்கள் ஆகி
ஒலிப்பது கேட்கின்றன.
புலம்பும் ஒலிகள் அல்ல இவை
சிலம்பின் ஒலிகள் இவை.
அன்புள்ள சீனா அவர்களே.
உங்கள் கவிதைக்குள்
எத்தனையோ கவிதைகளை
ஒளித்து வைத்திருக்கிறீர்கள்.
உங்களிடம்
கவிதை தேடும் ஒளியும் அதிகம்.
கவிதை பாடும் ஒளியும் அதிகம்.
கம்பனும் டி.கே.சி யும்
ஒரே நபராய்
ஒளிந்து விளையாடுவது போல்
ஒளிந்து
ஒளிர்ந்து விளையாடுங்கள்.
ஆம்
விளையாடிக்கொண்டேயிருங்கள்.
பாராட்டுகள்!பாராட்டுகள்!!பாராட்டுகள்!!!
இப்படிக்கு
அன்புடன்
ருத்ரா