ஆட்சி மாற்றத்தில்.. பிரசவம்
--------------------------------
1.ஆட்சி மாற்றத்தில்
ஆட்சி மாறுகிறது
அகிலத்தில்,
காட்சி மாறுகிறது
காலையில்..
ஆமாம்,
இதுவரை-
இரவெலாம் இருந்த
இருளின் ஆட்சி
அப்புறப்படுத்தப்பட்டுவிட்டது
இளைய தலைவனாம்
இரவியின் வரவால்!
2.விண்ணிலுமா�
வானில்
வனப்புகாட்டும் நட்சத்திரங்கள்-
பகலெல்லாம் படுத்துறங்கிவிட்டு
இரவில்
வானவீதியில் வந்துநின்று
வழியில் வருவோரை
தொழிலுக்கு அழைத்து
கண்சிமிட்டும்
விண்ணகத்து மேனாமினுக்கிகள்!
3.சலித்துப் போய்�
பார்க்கக் கூடாத
பலவீட்டுச் சமாச்சாரங்களைப்
பார்த்துச் சலித்ததாலே
அடிக்கடி எடுக்கிறானோ
விடுப்பு,
அந்தரத்துச் சந்திரனும்�!
4.பிரசவம்
சப்தமிட்டு
சண்டையிட்டுக் கெடுத்துவிடாதீர்கள்
இரவின் அமைதியை,
இருக்கிறது அது
பிரசவ வலியில்,
பின்னிரவும் வந்துவிட்டது,
இப்போது
பொழுதும் விடிந்துவிட்டது,
பிரசவமும் முடிந்துவிட்டது �
பகலாக,
சுகப்பிரசவம்தான்!
-செண்பக ஜெகதீசன்
www.geocities.com/vsnjag/
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-03-16