வெற்றுப் பேப்பரோடு சிலநேரம்
--------------------
பிறர் கவிதையை
வாசிப்பது சுகம்.
ரசிப்பது சுகம்.
பிடித்திருந்தால்
தனியே எடுத்து
வைத்துக் கொள்வது
தனி சுகம்.
எல்லாவற்றிலும் சுகம்
காதலில் விழுந்து
கவிதை எழுத வேண்டுமென்ற
எண்ணத்தோடு
வெற்றுப் பேப்பரோடு
வெகுநேரம் அமர்ந்திருப்பது…
- வைகறை நிலா.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-02-18