வெள்ளை இதய
உறைக்குள் ஒட்டி
கொண்டன உன்
நினைவு துகள்கள்
ஒரு சிகரட் டைப் போல்
உன் வார்த்தைகளுக்கு
தவமிருந்த வேளையில்
பார்வையால் எரித்தாய்
அத்தனை நினைவுகளும்
உதிர்ந்து சாம்பலாய்
போனாலும்
என் காதல் மட்டும்
இன்று குப்பை தொட்டியில்
வீசி எறியப்பட்ட
ஒரு சிகரட் பட்டாய்.
- கனகரமேஸ்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01