1. மேகத்துள் ஒட்டா நிலவு
என்
மனக் குளத்தில்
விம்பமாய் வீழ்ந்தும்
ஒட்டாத நிலவாய்
நீ
2. கடல்
கரை தடவி
திரை கிழித்து
நுரை தள்ளும்
அலை கடல்
விரை மேவி
புரை குலைய
தரை தாவி
உரை பறையும்
-கனகரமேஸ்
- கனகரமேஸ்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01