உனக்கொன்று சொல்வேன்
-- சக்தி சக்திதாசன்
கைகளில் கலப்பையும்
கண்களில் ஏக்கமும்
கால்களில் தயக்கமும்
கலங்களில் வெறுமையும்
பகலினில் வியர்வை
இரவினில் கண்ணீர்
இவர்களின் வாழ்க்கை
இயற்கையின் கொடுமை
வீதியில் படுக்கை - தெரு
விளக்கினில் படிப்பு
விடியுமா இவர் வாழ்வு ?
விளக்குவார் யார் உலகில் ?
ஆயிரம் கட்சிகள்
ஆளுக்கோர் கோஷங்கள்
அரசியல் வியாபாரம் - பாவம்
அரிசியில்லா உலைகள்
நேற்றும் அழுதனர்
இன்றும் அழுகின்றார்
நாளை அவர் வாழ்வில் ...?
நடக்கட்டும் மேதினம்
உனக்கொன்று சொல்வேன்
உள்ளதைச் சொல்வேன்
உலகத்தார் நெஞ்சத்தில்
உண்மை விழிக்கு தினமே
உண்மையான மேதினம்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-05-20