வந்தாள் தமிழ்மகள் தந்தாள்
---சக்தி சக்திதாசன்
சிற்றாடை கட்டி சித்திரத் தமிழ்ப்பாவையள்
சித்தம் தனை நிறைத்து யென் சிந்தை நிறைந்தாள்
முத்தாரம் பூட்டி முழுமதி தரைமீது வந்தது போல்
முப்பாலும் நான் கற்க முத்தமிழால் முடிச்சிட்டாள்
வித்தாரம் கற்றதும் விந்தை பல புரிந்ததும்
வித்தகி செந்தமிழ்ப்பெண் வித்தை தானென்பேன்
சொற்பாரம் கொண்டு நல் கவிதை பல புனைவதும்
சொந்தமாய் அவள் மொழியழகு கண்டதினால்
நிற்பாரம் தாங்கிடும் இப்பூமிப் பாவையைப் போல
நித்திலங்குமரி தமிழ் எனைப் பொறுமையுடன் வளர்த்திட்டாள்
தொலைதூரம் வாழ்ந்தும் நெஞ்சில் தமிழன்பு நிலைப்பது
தோகை தமிழ்த்தோகையவள் அருளன்றி வேறில்லை
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-01-22