அந்த நாட்கள்
மனிததொழிற்சாலை
மாசு நீக்கம்
செய்யப்படுகிறதா!
மழலைவேண்டி
கருவறை
மையாய்
மடலெழுதுகிறதா!
மாதம் ஒருமுறை
மலர்களுக்குள்ளும்
ரத்தபலியா!
என்
கிராமத்து சகோதரி
கிழிந்தபாவாடைக்காரி
இப்படித்தான்
எண்ணுவாள்
இந்த நாட்கள்மட்டும்
இல்லையெனில்
ஒட்டுபோட்டபாவாடையில்
இன்னும்
ஓராண்டுகழித்திருப்பேன்!
சிலம்பூர் யுகா துபாய்
yughas@yahoo.com
mobil 050-2102376
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-12-05