Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

யாருக்கும் வெட்கமில்லை

- சத்தி சக்திதாசன்

யாருக்கும் வெட்கமில்லை

--- சத்தி சக்திதாசன்



உண்பதற்கு உணவில்லை
உடுப்பதற்கு உடையில்லை
உள்ளத்திலே அன்பில்லை
உதட்டினிலே உண்மையில்லை - ஆனால்
யாருக்கும் வெட்கமில்லை

படுப்பதற்கு பாயில்லை
பழக ஒரு நண்பனில்லை
பணத்திற்குப் பாசமில்லை
பாபத்திற்கும் குறைவில்லை - ஆனால்
யாருக்கும் வெட்கமில்லை

தேவைகற்கு அளவில்லை
தேடல்களில் பொருளில்லை
தௌ¤வான கொள்கையில்லை
தெரிந்து கொள்ள ஆசையில்லை - ஆனால்
யாருக்கும் வெட்கமில்லை

நீதிக்கு வெற்றியில்லை
நேர்மைக்கு மதிப்புமில்லை
நேற்றைகளை பார்ப்பதில்லை
நாளைகளில் அர்த்தமில்லை - ஆனால்
யாருக்கும் வெட்கமில்லை

கண்களில் கருணையில்லை
கடமைகளில் ஆர்வமில்லை
காதலிலே தூய்மையில்லை
கடைசிவரை பொறுமையில்லை - ஆனால்
யாருக்கும் வெட்கமில்லை

யாருக்கும் வெட்கமில்லை
யாவையுமே தனதுமில்லை
யாரையுமே நம்பவில்லை
யாருமே உறவுமில்லை - ஆனால்
யாருக்கும் வெட்கமில்லை
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-09-18


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • இயற்கை மருந்து
  • அவள்
  • தந்தையின் நினைவாக
  • நாகரீக உலகமா ?
  • உணர்வலைகள்
  • லண்டனின் லட்சணம்
  • ரயில் நிலையப் பாடகன்
  • நான் கூற நீ கேட்க
  • தமிழின்பம்
  • எதையும் இதயம்
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube