நாளின் மறைவு ... பாடலின் பிறப்பு
--- சத்தி சக்திதாசன்
மாலைதான் இது
மயக்கும் வேளைதான்
மனதில் ஒரு ராகம்
பறவை மீண்டும்
பறக்குது தன்
கூட்டுக்கு
நிலவு மீண்டும்
நீந்துது அந்த
வானில்
பகலை அணைக்க
இரவு அசைந்து
வருகுது.
ஆண்டவன் தூங்க
அணைக்கின்றானோ
விளக்கை ....
ஆந்தைக்கு ஏனோ
கொண்டாட்டம்
ஆரம்பம் அதன் உலகம்
காரில் ஏறி
விரைகின்றேன்
அது கூட என் கூடோ ?
உழைப்பதும் பின் நம்
பிழைப்பதும் உலகில்
இயந்திரச் சுழற்சி ..
எங்கே தொடங்குகிறோம்
அங்கேயா முடிக்கின்றோம் ?
அதுவும் தெரியவில்லை
சிரிப்பதும் செயற்கை
அழுவதும் செயற்கை
இதுகூட இயற்கையோ ....
என் நாளின் முடிவு
ஏக்கத்திற்கு எங்கே முடிவு
தேவைகளுக்கு எங்கே ....
தூக்கத்தைத் தொலைத்தது
தொலைத்ததை மறந்தது
துன்பத்தில் விளைந்ததா அன்றி ....
காலையில் தொடங்கி
மாலையில் முடிவது , நாள்தான்
மனதின் எண்ணங்களல்ல
காரும் பறக்குது என்
மனமும் பறக்குது
நான் செல்வதும் ஒரு கூடுதான் ....
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-09-18