பெண்களுக்கோர் தினம்
சத்தி சக்திதாசன்
பெண்களைக் கொண்டாடுவோம்
பெண்களின் தினத்தை நன்றாடுவோம்
முன்பொரு பாரதி எடுதியம்பினான்
முத்தமிழ் துணைகொண்டு கவி பாடினான்
நவீன உலகத்தின் நாயகிகள்
நாளைய முன்னேற்ற சாரதிகள்
பேதைகள் என்றொரு சொல் அழிப்போம்
பெண்களின் பெருமைகள் பகன்றிடுவோம்
அர்த்தநாராசுவரர் அழகினை அறிந்திடுவோம்
ஆண்டவன் விளக்கிய தத்துவம் உரைப்போம்
சீதனம் என்றொரு சொல் இயம்பிடுவர் இல்லை
சீதைகள் இப்போ திக்குளிப்பதுமில்லை
ஏற்றம் கொண்ட சமுதாயம் காண விழைவோம்
எமது மனங்களில் சமத்துவம் காண்போம்
உழைப்பதில் எவர்க்கும் பெண்காள் சளைத்தவரல்ல
உண்மை இதுவென உரைத்திடுவோம்
வருடம் ஒருநாள் வரும் தினமல்ல
வாழும் தினங்கள் அனைத்தும் பெண்களுக்கே !
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-03-27