Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

தென்றல்..அற்புதத்தை..சோகம் சுரந்த

- கலைமகள் ஹிதாயா றிஸ்வி

தென்றல்..அற்புதத்தைக் காட்டு..சோகம் சுரந்த கோபம் ...!

01.
தென்றல்
---------------
காற்றுகள் பல வந்தும்
கலங்கிடாமல் நிற்கின்ற
ஆற்றலுள் ளொன் நானென்று
அகங்காரம் கொண்ட ஒரு
வாட்டமுள்ள ஆல மரம்
வாழை யொன்றை நோக்கியது!

சிறியவனே நீ இந்தச்
செகத்தினிலே வாழ்ந்து விடும்
அரு கதையோ சில காலம்
அறிவாயோ என்று ரைத்துப்
பெருஞ் சத்தம் போட்டுத் தன்
பேரிரைச்சலைக் காட்டியது

வாழை மரமோ வாய்திறவா(து)
வருத்தமுடன் நிற்கையிலே
காலையிலே வீசிய புயற்
காற்றதனால் எதிர் நின்ற
அவவால மரம் விழுஞ் சத்தம்
அவ் வாழைக் கொலித்ததுவாம் !



02.
அற்புதத்தைக் காட்டு !
----------------------------

மன சாட்சியே நீ யொருதரம் நல்லவனாய் மாறு
கேவலமான செயல் தனை நன்மையாய் மாற்று !
இப்புவியில் உன் பிறப்பின் தூய்மையைக் காட்டு .
மக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்திப் பாரு !

கன்னீயரை மிதித்து நிதம் மகிழ்வு கண்டு
நேயமில்லா படுபாவி !உள்ளங் கொண்டு ,
வாழுகின்ற காளையர் தம்மை !வாட்டு
நொந்தழும் பெண்களுக்கு கருணை காட்டு !

வெளிநாடுக்கு படித்தவரை அனுப்பி விட்டு .
கொள்ளையருக்கு நாட்டில் இடமிட்டு
உருமாறும் கொடுமைகளுக்கு அழிவை யூட்டு
உலகெங்கும் இருளுக்கு ஒளியைக் கூட்டு !

கண்ணீர்விட்டு கவலைப்பட்டு இந்த மண்ணில்
வேதனைப் பட்டு வாழுகின்ற அப்பாவி மக்கள்
நிம்மதி பெற்று உன்னாலே !ஆறுதல் பெற்று
மகிழ்ச்சியாய் மூச்சிவிடவுன் அற்புதத்தைக் காட்டு !



03.
சோகம் சுரந்த கோபம் ...!
----------------------------------

வாழ்வில்
பிரச்சினைகளை விட்டு மாறிச் செல்வதை விட ,
வேறு வழி புரியவில்லை ..!

எல்லா விதமான தொல்லைகளையும்
அகற்றி விட்டால்,
வாழைப்பழத்தை விட மென்மையானது
இதயம் ..!

நீ-
செய்வது தான் சரியென்று நடந்தால் ,
நாயின்வாலை நிமிர்த்த முடியுமென்றசெயலாகும் ..!
நான் -இனி
விலகித்தான் போக வேண்டும் ..!
வி!ளங்கித்தான் ஆக வேண்டும் ..!

சோகம் சுரந்த கோபம்
என்னுள்ளே நினைத்துப் பார்க்கலாம் .!
உனக்காக மனம் திருந்தி வருவாளென்று
நீ ,
நினைத்துப் பார்க்கலாம் .!
பாசவுள்ளம்சாம்பலாகிப் போனது ..!!

உன்,
தொல்லைதரும் நிகழ்வுகள் ...
எனக்குள் வந்து நிழலாடும் போது ....,
தீயாய் எரியும் விறகுகளாய்
என் ஆத்மா
எரிந்து கொண்டிருக்கிறது ..!
புகைந்து கொண்டிருக்கிறது ..!!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2013-11-26


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • ஊசலாடுகிறதே.. வெளிச்சத்து.. மிதக்கும்
  • உறவு.. பார்வையின்.. வாசம் சுமக்கும்!!
  • காலத்தின் தரிப்பிலே.. தனி மரமாய்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube