காலத்தின் தரிப்பிலே.. தனி மரமாய்
01.
காலத்தின் தரிப்பிலே ...
-------------------------
கரையான்களாய் அரிக்கும்
மனசு .....
பழுதுகலாக்கி விட்டு
சங்கிலித் தொடர்களாய் -
சந்தோஷம் கொண்டாடும் ..!
ஆனாலும் -
தூசுகளிடமிருந்தோ ....
தூள்களிடமிருந்தோ ....
எனக்கு -
எந்த வியாதிகளும்
தடவித் தரவில்லை அவை ...!
பார்த்தாயா.....?
எறும்புகளின் அந்த ஒற்றுமையை ..?
கண்களில் பட்டதா ...?
ஒன்றோடு ஒன்று சந்தித்து முத்தமிடுவது ....?
மழை தூவுகிறது -
பொந்துகளில் ...!
அறிவு படைத்த மனிதன்
யோசித்த வண்ணம் இருக்கிறான் ...!
சாதி மத பேதங்களில் .....
மானிடர் வாழ்வு
போராடுகிறது ...!
சொத்து சுகங்களில்
உயிர் -
பலியாகிறது ...!
உறவுகளின் போராட்டத்தில்
மனிதம் -
அழிகின்றது ...!
பகைவர்களின் எதிர்ப்புக்களில்
உரிமை -
இழக்கப்படுகிறது .....!
தோழியின் மனம் ,
ஏறும்புக் கூட்டங்களினூடே நகர்கிறது ...!
இதயத்தின் ஏக்கங்களோடு,
மனிதர்களின் செயல்களோடு -
காலத்தின் தரிப்பிலே ......!
மனிதர்களின் பகையிலே .....
துயரத்தின் உணர்வுகள் ....
உணர்வுகளின் தாக்கங்கள் ....
இடிபோல
முழங்கியெழும்....!
பட்டாசு போல
சிதறிப் போகும் ....!
02.
தனி மரமாய்
--------------------
துயரினைக் கண்டால்
இதயம் நோவும்
வேதனை தொடரும் ..!
மனப் பூ வை
நுகர ...
சுவாசம் தேவை ..!
தேடிய செல்வமெல்லாம்
இயற்கை அழிவுகளில்
தொலைந்து போகும் ..!
தனி மரமாய் ..,
மணம் _
தலை நிமிர்ந்து நிற்கும் ...!
உற்றோர் .,.
உறவினரெலலாம்
எனக்கு
துரத்து உறவுகளாகும்
எழுத்து மட்டும்
எனக்கு _
மன ஆறுதல் கொடுக்கும் ...!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-12-12