தேடல்
சாலையில் அடிபட்ட
சாமானியன் ஒருவன்,
அவசரமாய்க் கடக்கும்
ஒவ்வொரு முகத்திலும்
தேடுகிறான்
தான் என்றோ தொலைத்துவிட்ட
மனிதத்தை!!!
- பா நந்தன்
நன்றி http://www.maraththadi.com
யாரிடம்?
அமெரிக்கனுக்கு அடாவடித்தனம்
ஆங்கிலேயனுக்கு ஆணவம்
இந்தியனுக்கு பேச்சு
ஜப்பானியனுக்கு சுறுசுறுப்பு
மற்றதெல்லாம் இருக்கட்டும்
மானிடம் யாரிடம்?
- பா நந்தன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-11-07