Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

கனவு கலைந்தது.. எதற்கான மோகம்?

- க. பழனிவேல், ஜெயங்கொண்ட சோழபுரம்

கனவு கலைந்தது.. எதற்கான மோகம்?

01.
கனவு கலைந்தது
-------------------------

கல்லூரி நாட்களில்
கனவாகத் தெரிந்தவள்
கலை இழந்து நிற்கிறாள்!
மணம்முடித்துப் போனவளின்
மருள்முகம் கண்டதும்
மனம் கனத்து நின்றேன்!

மாங்கலயம் தொலைத்து வந்தாள்!
அவள் முகம் நோக்கி,
மாங்கலயம் எங்கே என்றேன்?
மணாளன் தொலைந்தான் என்றாள்!
மணாளன் எங்கே என்றேன்?
மரணம் தொலைத்தது என்றாள்!

வாழ்வில் இருளுமாய்
வயிற்றில் கருவுமாய்
வழியற்று நின்றாள்

விழி நோக்கி நின்றேன்
மொழி இல்லை என்றாள்
வழி காட்டி நின்றேன்
விதி கூறி மறுத்தாள்

காரணம் கேட்டால்
காலனின் வேலையால்
கறைப்பட்டுப் போனேன் என்றாள்

அப்ப...
காத்திருந்தவன் கதி.....!
என்றேன்.

கவனமாய் பதிலுரைத்தாள்
கனவு கலைந்தது
காலம் வென்றது என்று!


02.
எதற்கான மோகம்?
--------------------------------

காரியமும் தவறாது
காரணமும் தெரியாது
கவனமும் சிதறாது
காட்சியும் மறையாது
ஏனென்றும் விளங்காது
எதனாலும் நிற்காது
எல்லைக்குள் சுருங்காது
எள்ளளவும் குறையாது
அவளிடத்து எப்படியுரைப்பேன்
என் காதலை?
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-04-26


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • எனது கவிதை
  • அன்னை.. பால்யகால சினேகிதி

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube